×

சுவாதி

துலாம் ராசியிலேயே அதிக ஒளிமிக்க இளமையான நட்சத்திரமே சுவாதியாகும். அதனாலேயே, இளகிய மனமும், அழகும் உங்களிடத்தில் நிரம்பியிருக்கும். எல்லா வயதிலும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். நீண்ட விரல்களை உடையவர்களாகவும், கண்களால் பேசக் கூடியவர்களாகவும் இருப்பீர்கள். புன்னகை பூத்த முகமும், வசீகரத் தோற்றத்தையும் கொண்டிருப்பீர்கள். சுவாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சுவாதியின் ஒளிக் கீற்றுகள் நத்தை மீதுபட்டு முத்தாகிறது. மற்ற நாட்களில் உருவாகும் முத்தெல்லாம் நன்முத்தல்ல. அதுபோல, சுவாதி நட்சத்திரக்காரர்கள் வீட்டிலிருந்தால் வீடு விருத்தியாகும் என்று சோதிட நூல்கள் பேசுகின்றன. வேப்பங்காய் கசக்கும். ஆனால், இதுவும் ஒருவகையான ருசிதானென்று சாப்பிடுவீர்கள். இந்த மனப்பான்மை மனதளவிலும் வெளிப்படும். நன்மை, தீமை எதையும் வரவேற்பறையில் வரவேற்று எதிர்கொள்ளும் தனித்தன்மைமிக்கவர்கள் நீங்கள். ராகு விஷமுள்ள ராகு மட்டுமல்ல. வீர்யமுள்ள ரத்னத்துடன் கூடிய வலிமையாக ராகு உள்ளது. அதனாலும் நீங்கள் எல்லாவற்றிலிருந்தும் உங்களை வித்தியாசப்படுத்துவீர்கள். சனி, சுகாதிபதியாகவும், பூர்வ புண்யாதிபதியாகவும் இருப்பதால் வாழ்க்கை ஜெட் வேகத்தில் ஜிவ்வென்று பறக்கும். படிப்பறிவும், பட்டறிவும் இணைந்து புதிய கோணத்தில் யோசிக்க வைப்பார். உணவுத் துறை, பரதநாட்டியப் பள்ளி, கார், பைக் ஷோரூம் போன்றவைகளால் அதிக லாபம் பெறுவீர்கள். குறுக்கிடும் சில ஸ்நேகங்களில் கவனம் வையுங்கள். பூர்வ புண்யாதிபதியாக சனி வருவதால் சத்திரம், சாவடி கட்டித் தருவீர்கள். ‘‘எங்கப்பா படிச்ச பள்ளிக்கூடம்’’ என்று பள்ளிக்கு  ஒரு அறை கட்டித் தருவீர்கள். கடவுள் தேடல் மிகுந்திருக்கும். மெல்லியதாக துறவற வாழ்க்கை வாழ்வீர்கள். அரசால் நிறைய பதக்கமும், பாராட்டும் பெறுவீர்கள். எதையும் கூர்மையாக ஆராய்ந்துதான் ஒப்புக்கொள்வீர்கள். சிறிய வயதிலேயே சட்டென்று பெரிய வேலை கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்புகள் கிடைக்கும். பொதுவாக சுவாதி நரசிம்மருக்கு உரித்தான நட்சத்திரம். ராசியாதிபதியான சுக்கிரனும், ராகுவும் இணையும்போது மலையும், இயற்கை வளமும் நிறைந்த இடங்கள் உங்களுக்கு பிடிக்கும். அதனால், கருணாமூர்த்தியான திடீரென்று தூணிலிருந்து வெளிப்பட்ட  நரசிம்மத்தை வணங்கும்போது நிச்சயம் நல்ல திருப்பம் கிடைக்கும். பிரச்னைகளை எதிர்கொள்ளூம் வலிமை பெறுவீர்கள். மலையும். இயற்கை அழகும் நிரம்பிய சூழலான சோளிங்கர் தலத்தில் வீற்றிருக்கும் யோக நரசிம்மரை தரிசியுங்கள். அரக்கோணத்திலிருந்து 27 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர் போன்ற இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன….

The post சுவாதி appeared first on Dinakaran.

Tags : Sawathi ,Libra ,Swari ,
× RELATED துலாம்