×

ரோகிணி

இருபத்தேழு நட்சத்திரங்களில் பதிமூன்றாவது ஒளிமிகுந்த நட்சத்திரம் இதுவேயாகும். பணம் வரும்போது வாரி வாணம் விடாது பத்திரப்படுத்துவது நல்லது. உங்களை இயற்கையின் செல்லப் பிள்ளைகள் என்றால் அது மிகையல்ல. வசிப்பது குடிசை வீடானாலும், வாசலில் ரெண்டு தொட்டியில் பூஞ்செடி, குரோட்டன்ஸ் என்று கெஸ்ட் ஹவுஸ் ரேஞ்சுக்கு அலங்கரிப்பீர்கள். பத்து நாள் டூர் போய்விட்டு வந்தால் நூறு நாளைக்கு அதையே அசைபோடும் சாட்சாத் ரிஷபம் நீங்கள்தான். வியப்பூட்டும் விஷயங்கள் அவ்வளவு சீக்கிரம் உங்களை விட்டு அகலாது. அதனாலேயே இன்னும் அதையேவா நினைச்சுகிட்டிருக்க என்று உங்களை சுற்றியுள்ளோர் சொல்வார்கள். நயம்பட உரை’ எனும் ஔவையின் வார்த்தையை கல்வெட்டாக பதித்துக் கொள்வீர்கள். ‘நாலு வார்த்தை பேசினாலும் அதுல ஒரு நயம் வேண்டாம்’ என்று அடிக்கடி கூறுவீர்கள். கண்கள் பேசும். கைகள் அபிநயிக்கும். வாய் நிறைய கொள்ளைச் சிரிப்பு. சந்திரனின் வட்ட முகம். இதுதான் ரோகிணியின் முதல் அறிமுகம். பள்ளிப் பருவத்தில் கட்டுரைப் போட்டியில் பேர் கொடுத்தால், கவிதையில் வேண்டாம் என்று விடுவார்கள். எல்லாவற்றிற்கும் கைதூக்கிக் கொண்டிருக்க மாட்டீர்கள். சிறிய வயதிலேயே ராணுவம், காவல்துறையில் சேர வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆசிரியர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்து நற்பெயர் எடுப்பீர்கள். சக மாணவர்கள் தவறு செய்தால் நையாண்டியாக பேசுவீர்கள். எல்லா விஷயங்களிலும் ஜாக்கிரதைப்படுத்துதல் இருப்பதால் தப்பித்து சமாளிப்பீர்கள். விவேகமாக குருதசையில் சம்பாதித்ததை காப்பாற்றிக் கொள்ளுங்கள். பேராசை பெருநஷ்டம் என்ற பழமொழியை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். ஏழை வீட்டில் பிறந்திருந்தாலும் முகத்தில் ஒரு செல்வந்தர்களின் வனப்பு இருக்கும். படிப்பு சுமாராக இருந்தாலும் ஓவியம், உடையலங்காரப்போட்டி என்று வெளுத்து வாங்குவீர்கள்.  ரிஷப ராசிக்குள் இருக்கும் ரோகிணி நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருப்பதால் ஆமருவியப்பன் எனும் திருநாமத்தோடு தேரழந்தூர் என்ற தலத்தில் அருள்பாலிக்கும் பெருமாளை வழிபடுங்கள். புராண காலத்தில் இத்தலத்தை கிருஷ்ணாரண்யம் என்றே அழைத்தனர். இத்தல பெருமாளுக்கு கோசகன் எனும் திருப்பெயரும் உண்டு. பசுவோடு காட்சி தரும் உற்சவப் பெருமாளை தரிசித்து வாருங்கள். இக்கோயில் மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள குத்தாலத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது….

The post ரோகிணி appeared first on Dinakaran.

Tags : Rohini ,
× RELATED லாலு மகள் ரோகிணியின் சொத்து மதிப்பு ரூ.16 கோடி: பிரமாண பத்திரத்தில் தகவல்