×

பஞ்சபாண்டவ சூட்சுமம்

இது எப்படி? சந்தேகங்கள் பல. அவற்றில் ஒன்று இது. திரௌபதி, பஞ்ச பாண்டவர்கள் ஐவரை மணந்தார். அனைவருக்கும் தெரிந்ததுதான் இது. “இது என்ன நியாயம்? ஒரு பெண், ஐந்து ஆடவர்களை மணப்பதாவது?” என்ற வாதம் – எண்ணம் தோன்றலாம்.அதற்கான விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன், திரௌபதி, பஞ்ச பாண்டவர்கள் ஆகியோரைப் பற்றிச் சில தகவல்களைப் பார்க்கலாம்.பஞ்ச பாண்டவர்களோ – திரௌபதியோ, நம்மைப்போல பிறந்தவர்களல்ல. தர்மதேவதை, வாயு பகவான், இந்திரன், அசுவினி தேவர்கள் ஆகிய தேவர்களின் அம்சமாக அவதரித்தவர்கள். அடுத்து திரௌபதியும் நம்மைப்போல பிறந்தவரல்ல. யாகத்தீயில் அவதரித்தவர். திரௌபதிக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும், ஐந்து பிள்ளைகள் பிறந்தார்கள். ஒன்று இரண்டு கூட குறைய இருக்கக் கூடாதா? மிகவும் சரியாக ஐந்து குழந்தைகள் என்று ஏன் இருக்க வேண்டும்? இதற்கான பதிலை, திருச்சி – திருப்பராய்த்துறையைச் சேர்ந்த ஸ்ரீராமகிருஷ்ண தபோவன நிறுவனர் ஸ்ரீசுவாமி சித்பவானந்தர் எளிமையாக, தெளிவாக விளக்குகிறார்.திரௌபதி என்பது மனம். பஞ்ச பாண்டவர்கள் என்பது நம்மிடம் உள்ள ஐம்புலன்கள். மனமும் ஐம்புலன்களும் சேர்ந்தால், ஐந்து குழந்தைகள்தாம் பிறக்கும்; ஆறாவது குழந்தை பிறக்காது. அதாவது மனமும் கண்ணும் சேர்ந்தால் – பார்வை; மனம்+காது – கேட்பது; மனம்+வாய் – பேச்சு; மனம்+மூக்கு -நுகர்தல்; மனம்+உடம்பு – தொடு உணர்ச்சி.இவ்வாறு மனமும் ஐம்புலன்களும் சேர்ந்து ஐந்துவிதமான செயல்கள் நடைபெறுவதையே, திரௌபதிக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் ஐந்து குழந்தைகள் பிறந்தன என்கிறது மகாபாரதம்.மேலும், மனம் என்னதான் ஐம்புலன்களுடன் சேர்ந்து செயல்பட்டாலும், ஞான நூல்களின்படி அது எப்போதுமே தூய்மைதான். அதனால்தான் ‘மனசாட்சி’ என மனத்தின் தூய்மையைக் குறிக்கிறோம். இதைக் குறிக்கும் முகமாகவே ‘ஐவருக்கும் பத்தினி அழியாத கன்னி’ என திரௌபதியின் தூய்மை மனத்தின் தூய்மை குறிக்கப்படுகிறது. உண்மையை உணர்வோம்! உயர்வோம்!- வி.ஆர். சுந்தரி….

The post பஞ்சபாண்டவ சூட்சுமம் appeared first on Dinakaran.

Tags : Panchapandava Sutsuma ,Draupadi ,Pancha Pandavas ,Panchapandava Sutsumam ,
× RELATED திரெளபதி அம்மன் கோயிலில் பூங்கரக ஊர்வல நிகழ்ச்சி