×

அனைத்து மங்களங்களையும் அருளும் கருடனின் 110 திருப்பெயர்கள்

கருட அஷ்டோத்தர சத நாமாவளி1.  பக்ஷி ராஜாய நம: – பறவைகளின் அரசனுக்கு வணக்கம்2.    கருத்மதே நம: – சிறந்த இறக்கைகளைக் கொண்டவருக்கு வணக்கம்3. வைநதேயாய நம: – வினதையின் மகனுக்கு வணக்கம்4.    சதுர்வித மந்த்ர ஸ்வரூபாய நம: – நான்கு விதமாக உச்சரிக்கப்படும் கருட மந்திரத்தின் வடிவாக இருப்பவருக்கு வணக்கம்5. ஸர்வ வேத ரூபாய நம: – அனைத்து வேதங்களின் வடிவாக இருப்பவருக்கு வணக்கம்6.  ஸ்வார்த்த அதிரோஹாய நம: – வேதத்தின் பொருளான திருமாலைச் சுமந்து வரும் வேத வடிவினருக்கு வணக்கம்7.  ஸங்கர்ஷண அம்சாய நம: – திருமாலின் வடிவமான சங்கர்ஷணனின் அம்சமாக உதித்த கருடனுக்கு வணக்கம்8.  ஸ்தோம ஆத்மனே நம: – ஸ்தோமம் என்ற வேதப் பகுதியை ஆத்மாவாக உடையவருக்கு வணக்கம்9. காயத்ர ஸாம நேத்ராய நம: – காயத்திரி மந்திரத்தைக் கண்ணாகக் கொண்டவருக்கு வணக்கம்10.  த்ரிவ்ருத் ஸாம சிரஸே நம: – திரிவ்ருத் என்ற மந்திரத்தைத் தலையாக உடையவருக்கு வணக்கம்11. யஜுர் வேத நாமதேயாய நம: – யஜுர் வேதத்தையே தனது பெயராகக் கொண்ட கருடனுக்கு வணக்கம்12.  சந்தோங்காய நம: – வேதப் பா வகைகளைத் தன் அங்கங்களாகக் கொண்டிருக்கும் கருடனுக்கு வணக்கம்13. வாமதேவ்ய ஸாம விக்ரஹாய நம: – வாமதேவ்ய மந்திரத்தை உடலாகக் கொண்டவருக்கு வணக்கம்14.  ப்ருஹத் ஸாம பக்ஷாய நம: – பிருகத் என்னும் சாமவேத மந்திரத்தை இறக்கையாகக் கொண்டவருக்கு வணக்கம்15. ரதந்தர ஸாம பக்ஷாந்தராய நம: – ரதந்தரம் எனும் சாமவேத மந்திரத்தை மற்றோர் இறக்கையாகக் கொண்டவருக்கு வணக்கம்16.    யஜ்ஞாயஜ்ஞீ புச்சாய நம: – யஜ்ஞாயஜ்ஞி எனும் வேதப் பகுதியை வாலாக உடையவருக்கு வணக்கம்17. ச்ருதி சத சிகர அபிஷ்டுதாத்மனே நம: – வேதங்களின் சிகரமான உபநிடதங்களால் போற்றப்படுபவருக்கு வணக்கம்18. சகுனி ரூப தேவாய நம: – பறவை வடிவிலுள்ள தெய்வத்துக்கு வணக்கம்19. பஞ்சவர்ணீ மந்த்ர கர்பாய நம: – ஐந்து எழுத்துகளை உள்ளடக்கிய கருட மந்திரத்தில் குடிகொண்டிருப்பவருக்கு வணக்கம்20. ஸப்த ஸ்வர கதயே நம: – ஏழு சுவரங்களுக்கும் அடிப்படையான சாம வேதத்தின் வடிவாய் இருப்பவருக்கு வணக்கம்21. அணிமாதி அஷ்ட ஸம்பதே நம: – அணிமா, கரிமா உள்ளிட்ட எட்டு பெரும் செல்வங்களை உடையவருக்கு வணக்கம்22. தர்வீகராராதயே நம: – பாம்புகளின் எதிரிக்கு வணக்கம்23.    ஸாத்வத ஸம்ஹிதா ப்ரதித மஹிம்னே நம: – பாஞ்சராத்திர ஆகமத்தின் ஸாத்வத ஸம்ஹிதையால் கூறப்பட்ட மகிமைகளைக் கொண்டவருக்கு வணக்கம்24. பாத்ம ஸம்ஹிதா ப்ரஸ்துத வைபவாய நம: – பாஞ்சராத்திர ஆகமத்தின் பாத்ம ஸம்ஹிதையால் போற்றப்பட்ட பெருமைகளை உடையவருக்கு வணக்கம்25.  நாராயண ஸம்ஹிதா ப்ரதித வைபவாய நம: – பாஞ்சராத்திர ஆகமத்தின் நாராயண ஸம்ஹிதையால் சொல்லப்பட்ட பெருமைகளைக் கொண்டவருக்கு வணக்கம்26. விஷ்வக்ஸேந ஸம்ஹிதா ஸம்மானித வைபவாய நம: – பாஞ்சராத்திர ஆகமத்தின் விஷ்வக்ஸேன ஸம்ஹிதையால் துதிக்கப்பட்ட பெருமைகளை உடையவருக்கு வணக்கம்27. ஸத்யாய நம: – மாறாத தன்மை கொண்டவருக்கு வணக்கம்28. ஸுபர்ணாய நம: – அழகிய இறக்கைகளைக் கொண்டவருக்கு வணக்கம்29.கருடாய நம: – இறக்கைகளைக் கொண்டு பறப்பவருக்கு வணக்கம்30. தார்க்ஷ்யாய நம: – பறவை வடிவம் கொண்டவருக்கு வணக்கம்31.  விஹகேச்வராய நம: – வானில் பறக்கும் பறவைகளின் தலைவருக்கு வணக்கம்32. பஞ்ச வித வ்யூஹாய நம: – சத்தியன், சுபர்ணன், கருடன், தார்க்ஷ்யன், விஹகேச்வரன் என்ற ஐந்து வகை வியூக மூர்த்திகளாக எழுந்தருளி இருப்பவருக்கு வணக்கம்33. உபநிஷத் கோஷித பஞ்ச விதாய நம: – உபநிஷத்துகளில் சொல்லப்பட்ட படி ஐந்து வித உருவங்களுடன் திகழ்பவருக்கு வணக்கம்34. பஞ்ச ப்ராணாய நம: – பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் ஆகிய ஐந்து வகை வாயுக்களாக இருப்பவருக்கு வணக்கம்35. ச்லிஷ்யத் போகீந்த்ர போகாய நம: – பாம்புகளைத் தனக்கு ஆபரணங்களாக அணிந்திருப்பவருக்கு வணக்கம்36. ச்ருதி நிகர நிதயே நம: – வேதங்களின் உருவகமாகத் திகழ்பவருக்கு வணக்கம்37.  ககேசாய நம: – பறவைகளின் தலைவருக்கு வணக்கம்38. ஹரி ஹ்ருதய ஆரோஹ தன்யாய நம: – திருமாலின் திருவுள்ளத்தில் ஏறி அமரும் பாக்கியம் பெற்றவருக்கு வணக்கம்39.  அண்டஜேந்த்ராய நம: – பறவைகளின் தலைவருக்கு வணக்கம்40. பவ பய கண்டனாய நம: – பிறவித் துயரைப் போக்குபவருக்கு வணக்கம்41.  ககபதயே நம: – பறவைகளின் தலைவருக்கு வணக்கம்42. ஸுசரித்ராய நம: – வியக்கத்தக்க நல்ல வரலாற்றைக் கொண்டவருக்கு வணக்கம்43. விநதா க்லுப்த ரக்ஷா விசேஷாய நம: – தாய் வினதையால் காப்பிடப்பட்டவருக்கு வணக்கம்44. ஏனோ நாசினே நம: – தீயவற்றை அழிப்பவருக்கு வணக்கம்45. நாக ஹந்த்ரே நம: – பாம்புகளை அழிப்பவருக்கு வணக்கம்46. பதக குல பதயே நம: – பறவைகள் குலத்தின் தலைவருக்கு வணக்கம்47. பத்ரி நாதாய நம: – இறக்கைகளை உடையவர்களின் நாதனுக்கு வணக்கம்48. ஜிஹ்மகாரயே நம: – பாம்புகளின் எதிரிக்கு வணக்கம்49. ஆசீவிஷாரயே நம: – பாம்புகளின் எதிரிக்கு வணக்கம்50. பக்ஷிமல்லாய நம: – வலிமை மிக்க பறவைக்கு வணக்கம்51. விபக்ஷ க்ஷபண ஸரபஸாய நம: – விரைவாக எதிரிகளை வீழ்த்துபவருக்கு வணக்கம்52. மாங்கல்ய தாயினே நம: – அனைத்து மங்களங்களையும் அருள்பவருக்கு வணக்கம்53.  ஸ்யந்தனேந்த்ராய நம: – வாகனங்களின் தலைவருக்கு வணக்கம்54. திவ்ய தாம்னே நம: – தெய்வீக ஒளி பொருந்தியவருக்கு வணக்கம்55. காத்ரவேய அந்தகாய நம: – கத்ருவின் மகன்களான நாகங்களை அழித்தவருக்கு வணக்கம்56. பணிபதி கடகாய நம: – ஆதி சேஷனைக் கையில் ஆபரணமாய் அணிந்தவருக்கு வணக்கம்57.    கார்க்கோட ஹாராய நம: – கார்க்கோடகன் என்னும் பாம்பைக் கழுத்தில் மாலையாக அணிந்தவருக்கு வணக்கம்58. அஷ்ட நாக ஆபரணாய நம: – எட்டு நாகங்களை எட்டு வித ஆபரணங்களாக அணிந்திருப்பவருக்கு வணக்கம்59. புஜக குல ரிபவே நம: – பாம்புக் குலத்தின் எதிரிக்கு வணக்கம்60. அங்க ப்ரத்யங்க லீன அம்ருத ரஸாய நம: – தன் திருமேனி அங்கங்கள் தோறும் அமுத ரசம் சொட்டும்படித் திகழ்பவருக்கு வணக்கம்61. ருத்ரா ஸுகீர்த்தி தேவி ஆராதிதாய நம: – ருத்ரா, சுகீர்த்தி ஆகிய இரண்டு மனைவியராலும் ஆராதிக்கப்படுபவருக்கு வணக்கம்62.    விஹங்கேச்வராய நம: – பறவைகளின் தலைவருக்கு வணக்கம்63. ராம கைங்கர்ய லப்த ஸேவா விசேஷாய நம: – நாக பாசத்தால் கட்டுண்டு விழுந்த ராமனைக் காத்து அவனுக்குத் தொண்டு செய்யும் பாக்கியம் பெற்றவருக்கு வணக்கம்64. க்ருஷ்ணாநுக்ரஹ பாத்ராய நம: – கண்ணனின் அருளுக்குப் பாத்திரமானவருக்கு வணக்கம்65. வைஜயந்தீ சகுந்தாய நம: – திருமாலின் வெற்றிக் கொடியாகத் திகழும் பறவைக்கு வணக்கம்66. த்ரியுக நிதயே நம: – ஞானம், பலம், வீரியம், சக்தி, ஐச்வரியம், தேஜஸ் ஆகிய ஆறு குணங்கள் நிறைந்தவருக்கு வணக்கம்67. த்ரிதாம வாஹனேந்த்ராய நம: – திருமாலின் தலைசிறந்த வாகனத்துக்கு வணக்கம்68.    வினதா நந்தனாய நம: – வினதையின் மகனுக்கு வணக்கம்69. பன்னக நத்தாய நம: – பாம்புகளை ஆபரணமாக அணிந்திருப்பவருக்கு வணக்கம்70. வைகுண்ட வச வர்த்தினே நம: – திருமாலின் அணுக்கத் தொண்டருக்கு வணக்கம்71. அகில வேதநீட அதிரூடாய நம: – வேதமெனும் ஆசனத்தில் ஏறி அமர்ந்திருப்பவருக்கு வணக்கம்72. அகுண்ட வைகுண்ட பீடீக்ருத ஸ்கந்தாய நம: – தனது தோள்களில் திருமாலை அமர்த்திக் கொண்டிருப்பவருக்கு வணக்கம்73. தேவாதிப ஆஹார ஹாரிணே நம: – தேவேந்திரனின் உணவான அமுதை அபகரித்து வந்தவருக்கு வணக்கம்74.  தைத்யாரி ஜைத்ர த்வஜ ஆரோஹிதாய நம: – திருமாலின் வெற்றிக் கொடியில் ஏறி அமர்ந்திருப்பவருக்கு வணக்கம்75. நிர்தாரித உத்கர்ஷாய நம: – திருமாலின் மகிழ்ச்சியையும் பெருமைகளையும் பறைசாற்றுபவருக்கு வணக்கம்76. தத்த்வ புத்தி தாயினே நம: – தத்துவ ஞானத்தை அருள்பவருக்கு வணக்கம்77. த்ரிவர்க அபவர்க ப்ரஸூதயே நம: – அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் அருள வல்லவருக்கு வணக்கம்78. ரிக் வேத ஸார ஸ்வரூபாய நம: – ரிக் வேத சாரத்தின் வடிவானவருக்கு வணக்கம்79. திஷ்ணியாத்ம சோபிதாய நம: – திஷ்ணியம் என்ற யாக மேடையைத் தன் அழகிய திருவடி நகங்களாகக் கொண்டவருக்கு வணக்கம்80. உபாஸநா ஸுலபாய நம: – வழிபடுவதற்கு எளியவராகத் திகழ்பவருக்கு வணக்கம்81. தார்க்ஷ்ய தண்டக ஸ்துதாய நம: – வேதாந்த தேசிகன் இயற்றிய கருட தண்டகம் என்னும் துதியாலே வணங்கப்பட்டவருக்கு வணக்கம்82. ஆஹவ ஸம்பன்னாய நம: – போரில் வெற்றி பெறுதலாகிய செல்வத்தை உடையவருக்கு வணக்கம்83. ரண புங்கவ ஸம்மானிதாய நம: – ராமனால் கௌரவிக்கப்பட்டவருக்கு வணக்கம்84. கஜேந்த்ர வரத ஸேவகாய நம: – கஜேந்திரனுக்கு அருள்புரிய வந்த திருமாலைத் தோளில் சுமந்து வந்து தொண்டாற்றியவருக்கு வணக்கம்85. ஹஸ்திகிரீச விசேஷ வாஹனாய நம: – அத்திகிரி வரதராஜப் பெருமாளுக்கு விசேஷ வாகனமாகத் திகழ்பவருக்கு வணக்கம்86. விக்ரீடத் பக்ஷ கோடி ஸௌந்தர்யாய நம: – விளையாடும் அழகிய இறக்கை நுனிகளைக் கொண்டவருக்கு வணக்கம்87. பஞ்சாத்மனே நம: – திருமாலுக்கு இணையாகப் பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்னும் ஐந்து வடிவம் கொண்டவருக்கு வணக்கம்88. பஞ்சாபிக்யாய நம: – சத்தியன், சுபர்ணன், கருடன், தார்க்ஷ்யன், விஹகேச்வரன் ஆகிய ஐந்து பெயர்கள் கொண்டவருக்கு வணக்கம்89. ஸுதா ஹர்த்ரே நம: – அமுதத்தைத் தேவ லோகத்தில் இருந்து அபகரித்து வந்தவருக்கு வணக்கம்90.  வாஹனேந்த்ராய நம: – வாகனங்களின் தலைவருக்கு வணக்கம்91.   ஸர்வ மங்கள தாயகாய நம: – அனைத்து மங்களங்களையும் அருள வல்லவருக்கு வணக்கம்92. கல்யாண குண நிதயே நம: – மங்கள குணங்களின் இருப்பிடமாகத் திகழ்பவருக்கு வணக்கம்93. ஸர்வாபீஷ்ட பல ப்ரதாயினே நம: – அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றித் தருபவருக்கு வணக்கம்94. ப்ரகடித பர ப்ரஹ்ம பாவாய நம: – இறைவனின் தன்மையை நமக்கு விளக்கிக் காட்டுபவருக்கு வணக்கம்95.  ஸர்வ க்லேச சேதனாய நம: – அனைத்துத் துன்பங்களையும் போக்குபவருக்கு வணக்கம்96.  மாயா புஜங்கி விஷம விஷ நிவாரணாய நம: – இந்திரஜித்தின் நாக பாசத்தால் ஏற்பட்ட விஷத்திலிருந்து ராமனையும் வானர சேனையையும் காத்தவருக்கு வணக்கம்97. விச்வ விக்யாத கீர்த்தயே நம: – உலகெங்கும் நிறைந்த புகழை உடையவருக்கு வணக்கம்98. அஹீந்த்ர புரவர்த்தி நதீ ரூபாய நம: – கடலூருக்கு அருகிலுள்ள திருவஹீந்திரபுரம் என்னும் திருத்தலத்தில், கருட நதி எனும் நதி வடிவில் திகழ்பவருக்கு வணக்கம்99.    ஸுதாஹரண கர்மணே நம: – அமுதைக் கொண்டு வருபவருக்கு வணக்கம்100. ஸுப்ரஸன்னாய நம: – கண்ணுக்கும் மனதுக்கும் இனியவராய்த் திகழ்பவருக்கு வணக்கம்101. ஸம்வித் சஸ்த்ர தாரிணே நம: – அறிவையே ஆயுதமாகக் கொண்டவருக்கு வணக்கம்102. பக்கணாசனாய நம: – அமுதைக் கொண்டு வரச் செல்லும் முன், தனக்கு உணவாக ஒரு கிராமத்தையே விழுங்கியவருக்கு வணக்கம்103. கத்ரூ ஸங்கேத தாஸ்ய க்ஷபணாய நம: – கத்ருவிடம் கட்டிய பந்தயத்தில் தோற்று அடிமைப்பட்டிருந்த தன் தாயின் அடிமைத் தளையைப் போக்கியவருக்கு வணக்கம்104. பணதர மஹிஷீ பத்ர பங்க அபஹாரிணே நம: – பாம்புகளின் மனைவியரின் அணிந்த மங்களச் சின்னங்களைப் பறித்தவருக்கு வணக்கம்105. பக்ஷவத் மந்த சைலாய நம: – இறக்கை கட்டிய மந்தர மலைபோல் திகழ்பவருக்கு வணக்கம்106.  அர்க்க ஸமான தேஜஸே நம: – சூரியனைப் போல் ஒளி படைத்தவருக்கு வணக்கம்107.  விஷ்ணு ரதாய நம: – திருமாலுக்குத் தேராகத் திகழ்பவருக்கு வணக்கம்108. ஹயாஸ்ய மந்த்ர உபதேஷ்ட்ரே நம: – வேதாந்த தேசிகனுக்கு ஹயக்ரீவ மந்திரம் உபதேசம் செய்தவருக்கு வணக்கம்109. கமலாலய உபலகருடாய நம: – நாச்சியார்கோவிலில் கல்லால் ஆன திருமேனியோடு கல் கருடனாகத் திகழ்பவருக்கு வணக்கம்110. க்ஷேமகாரீ சதக ப்ரஸ்துத பக்ஷிராஜாய நம: – க்ஷேமகாரி சதகம் என்ற நூறு சுலோகங்கள் அடங்கிய துதியால் போற்றப்பட்ட நாச்சியார்கோவில் கல் கருடனுக்கு வணக்கம்திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்…

The post அனைத்து மங்களங்களையும் அருளும் கருடனின் 110 திருப்பெயர்கள் appeared first on Dinakaran.

Tags : Khadan ,Ashtotra Sata ,King ,Karadan ,Dinakaraan ,
× RELATED சவுதி மன்னர் சல்மானுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு