×

கம்பரும், ஒட்டக் கூத்தரும்

வடமொழி வால்மீகி ராமாயணத்தைத் தமிழில் பாடி தமிழன்னைக்கு சமர்ப்பிக்க வேண்டுமென பேராசை (பெரிய+ ஆசை) கொண்டார். அவருடைய எண்ணத்தில் உதித்த பயிருக்கு எருவிட்டு வளர்ப்பதுபோல மன்னரும் வேண்டிட, ஆசைக்கு அளவுண்டோ? ஏற்றுக்கொண்டார். இவர் ஒருவரா காவியம் படைக்க முற்பட்டார்? இல்லை ஒட்டக்கூத்தரும் காவியம் படைக்க விரும்பினார். ஆதலால், இவ்விருவரும் பக்தி நூலை எழுதத் தொடங்கினர். கூத்தர், படைப்பை வேகமாக இயற்றினார். ஆசைப்பட்ட கம்பரோ முழுமனம் ஈடுபடாமல் பொறுத்திருந்தார்.ஒருநாள் மன்னர் (குலோத்துங்கன்) இருவரையும் நோக்கி (நூல்) காவியம் எந்த அளவில் எழுதப்பட்டுள்ளது? என வினவினார். கூத்தர், தாம் சுந்தர காண்டம் வரை பாடி முடித்துள்ளமையைப் பற்றிக் கூறினார். ஆனால், கம்பர், யுத்தகாண்டத்தில் நாகப்பாசப் படலம் வரை முடித்திருப்பதை நவின்றார். கம்பர் இதுவரை ஒன்றுமே எழுதவில்லை என்பதை மன்னரும் அறிவார். இவ்வாறு கம்பர் உரைத்ததும். ஓ… அவ்வாறாயின் யுத்த காண்டத்திலிருந்து ஒரு பாடல் பாடுமாறு கேட்டார்.கம்பரோ, சற்றும் கலங்காமல் தயக்கம் சிறிதும் இன்றி கலைமகளை மனதில் தியானித்து ஓர் அழகிய பாடலை (கவிதை) அப்போதே அச்சபை நடுவில் புதியதாக இயற்றிக் கூறினார். அது சேதுபந்தனப் படலத்தில் குமுதன் என்னும் வானரவீரன் பெயர்த்துக் கொணர்ந்து எறிந்த மலையை நீலன் என்னும் வானரத் தச்சன் அணைகட்ட எடுத்த கற்கள் பாலம் அமைக்க அடிக்கல் நாட்ட நடந்த நிகழ்ச்சியை கூறுவது.குமுத னிட்ட குலவரை கூத்தரின்திமித மிட்டுத் திரியுந் திரைக்கடல்துமித மூர்புக வானவர் துள்ளினார்அமுத மின்ன மெழுமெனு மாசையால்(யுத்த காண்டம் – சேது பந்தனம்)கம்பர், அப்பாட்டின் பொருளையும் நயத்தையும் விளக்கிக் கூறிக் கொண்டிருந்தபோது இடையே கூத்தர் தனக்கு ஓர் ஐயம் தோன்றி உள்ளது. அதற்கு விளக்கம் கூற வேண்டுமென்றார்.எதுவோ ? ‘துமி’ என்பதற்கு பொருள் யாது? உலக வழக்கில் இல்லையே என்றதும் நீர்த்துளியைத் ‘துமி’ என்று குறிப்பிட்டேன். உலக வழக்கில் உள்ளது. அதை நிரூபித்துக் காட்டுகிறேன் என்று அடுத்த நாள் மன்னர், கூத்தர், கம்பர் மூவரும் ஆயர் வீதியில் நடந்து சென்றனர்.முன்நாள் கம்பருக்கு உறக்கம் வரவில்லை கலைமகளை வணங்கினார் ‘துமி’ என்பதை மெய்ப்பிக்க வழிகாட்டு வாள் என்று நம்பினார். நிரூபித்து. மெய்ப்பிக்க கலைமகளின் அருளை வேண்டினார். அக்கணமே சரஸ்வதி அந்தாதியை பாடத் தொடங்கினார்.ஆய கலைகள் அறுபத்து நான் கினையும்ஏய உணர்விக்கும் என்னம்மை – தூயஉருப்பளிங்கு போல்வாள் என்னுள்ளத்தினுள்ளேஇருப்பளிங்கு வாரா திடர். – என்று போற்றித் துதித்தார். அவ்வாறு மூவரும் நடந்து செல்லும் போது ஒரு வீட்டில் ஆயர்குல மங்கை தயிரிலிருந்து வெண்ணெய் எடுக்க கடைந்தாள். அச்சமயம் குழந்தைகள் அருகே விளையாடிக் கொண்டிருந்தன. அவர்களை நோக்கி, மோர் கடைந்து கொண்டிருக்கிறேன். குழந்தைகளே விலகிச் செல்லுங்கள், இல்லையேல் ‘மோர்த்துமி’ தெறிக்கப் போகிறது என உரக்கக் குரல் கொடுத்தாள். அக்குரலில் உள்ள ஒலி அம்மூவரின் செவிகளிலும் விழுந்தன. உடனே, கம்பர் மற்ற இருவரையும் நோக்கி, ‘‘கேட்டீர்களா, மோர்த்துளி என்பதை மோர்த்துமி என்று ஆயர் மகள் கூறியுள்ளாள் என்றார். மன்னரும், கூத்தரும் கம்பர் கூறியது உண்மையே ‘துமி’ என்பது வழக்கில் உள்ளது. துமி என்றால் துளி என்பதும் பொருள் ஒன்றே. தம்மைக் காக்கவே கலைமகளே ஆயமங்கையாக வந்து அருள்புரிந்த பேரருளை எண்ணிக் கம்பர் மனம் நெகிழ்ச்சி அடைந்தார்.பொன்முகரியன்…

The post கம்பரும், ஒட்டக் கூத்தரும் appeared first on Dinakaran.

Tags :
× RELATED “வறட்சியால் கருகும் தென்னை மரங்கள்”.....