×

மலபார் கோல்டு – டைமண்ட்ஸ் சார்பில் தமிழ் பெண்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் விளம்பர படம்

சென்னை: மலபார் கோல்டு – டைமண்ட்ஸ் நிறுவனம் தமிழக சந்தையை இலக்காக வைத்து சமீபத்தில் வெளியிட்டுள்ள விளம்பர படத்தை திரைப்பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். தமிழ் பெண்களின் பாரம்பரிய அழகையும், நளினத்தையும் இந்த படம் கொண்டாடுவதுடன், சர்வதேச பெண்கள் தினத்தை ஒட்டி இந்த படம் வெளியிடப்பட்டது. இது, தனித்துவம் வாய்ந்ததாக மிளிர்கிறது. தமிழ்நாட்டு பெண்களின் பண்பாட்டு உணர்திறன்கள், அழகுணர்ச்சி தொடர்பான நுணுக்கமான விவரங்களுடன் வெளிக்கொணர்ந்துள்ள இப்படமானது மொழி ரீதியான தடைகளை தாண்டி அனைவருக்கும் பொதுவானது போலவே அமைந்துள்ளது. தமிழ் பெண்ணின் தனித்துவமான உண்ர்திறன்களும் மலபார் கோல்டு – டைமண்ட்ஸ் நிறுவனத்தின் அற்புத டிசைன்களும் இணைந்து மறக்க முடியாத ஒரு அற்புதத்தை உருவாக்கியுள்ளன. இந்த விளம்பரத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு எங்களை பெருமகிழ்ச்சி கொள்ளவைத்துள்ளது,’’ என மலபார் கோல்டு – டைமண்ட்ஸ் நிறுவனத்தின் சேர்மன் எம்.பி. அகமது தெரிவித்தார். இந்த விளம்பர படத்தை உருவாக்கிய அனுபவம் என்னுள் இருந்த ஆக்கபூர்வ திறனை தூண்டும் வகையில் இருந்தது.  தமிழ் பெண்களின் தொலைதொடர்பு பாணியில் காணப்படும் தனித்துவம் வாய்ந்த உணர்வு மற்றும் அழகுணர்ச்சியை வெளிக்கொணர மாபெரும் முயற்சி மேற்கொண்ட மலபார் கோல்டு – டைமண்ட்ஸ் நிறுவனத்தை நான் மனதார பாராட்டுகிறேன்,’’ என இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்தார்….

The post மலபார் கோல்டு – டைமண்ட்ஸ் சார்பில் தமிழ் பெண்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் விளம்பர படம் appeared first on Dinakaran.

Tags : Diamonds ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...