×

துதிப்போம் திதிகளை…

இந்த இதழில் அம்பாளை தரிசனம் செய்து பின் இறங்கும் பொழுது உள்ள திதியும் அதன் துதிகளை பற்றியும் பார்ப்போம்.அகஸ்திய முனிவரின் சோடச மாலை  அமர பட்ஷம் –   கிருஷ்ண பட்ஷம் ( இறங்கும்பொழுது ) தேய்பிறை 1-வது படி பிரதமை ஸ்ரீ சித்ராதேவிநிரஞ்சனமாய் நிராமயமாய் நினைவே யாகிநீங்காத பெருவாழ்வே லோக மாதாபரஞ்சோதியான பூரணியே தாயேபாற்கடலே எனையீன்ற பரமே சக்திபரமாகி யுலகமெலாம்வளர்க்கும் தேவிசங்கரியே பெளர்ணமியாய் வடிவங் காட்டித்துரிவான ரிஷிமுனிவர் பணிகொள் செல்வீசோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !2-வது படி த்விதியை ஸ்ரீ ஜவாலாமாலினி தேவிபிரியமுடன் பதினாலு கலையுமாகிபேசரிய தீபவொளி பிரம்மாகிஉரியதொரு தந்திவெளி தீபங் காட்டிஓங்கார ரீங்கார சக்தியாகிசரியென்று மதித்திடவே என்முன் வந்தசங்கரியே சாம்பவியே சர்வரூபிதுரியதுரியாதீத மமர்ந்து நின்றசோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !3-வது படி திருதியை ஸ்ரீ  ஸர்வமங்களாதேவிபத்துடனே நாலாகி எங்குத்தயனாய்பராபரையே பரஞ்சோதி பருவமாகிசித்தாகி உலகமெல்லாம் மயக்கும்தாயேதிருவருளே திருபுரையே தேவியம்மாவித்தாகி முளைத்தெழுந்த சுடரே தீபவிமலியே குண்டலி ஓங்கார சக்திசத்தான அண்டமெல்லாம் நிறைந்து நின்றசோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !4-வது படி சதுர்த்தி ஸ்ரீ  விஜயா தேவிபாசவலை தனில்சக்கி அலையாமல் தான்பண்புடனே அடியவருக் கருளவேண்டிநசமுடன்சதுரகிரிமலையிலேதான்நித்தியமும் நடனமதுபுரியும் தேவிபேசரிய ஞானமதைஎனக்களித்தபேரான சுமங்கலியே பெரியோருக்குத் தோஷமது வாராமல் காக்கும் தேவிசோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !5. வது படி பஞ்சமி நீலபதாகா தேவிசொல்லவொண்ணாச் சோதிமயமான தாயேசுந்தரியே உன்பாதம் கொடுப்பாய் அம்மாநல்லதொரு திருநடனமாடுந் தேவிநாதாக்கள் பணிகின்ற வாம ரூபிவல்லசித்தர் மனதிலுறை மகிமைத் தாயேவாலை திரிபுரை எனக்கு வாக்குத் தந்துதொல்லுலகத்தாசைதனை மறக்கச் செய்வாய்சோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !6 – வது படி சஷ்டி ஸ்ரீ  நித்யா தேவிஅண்டாண்ட புவனங்கள் நீயே யானாய்அம்புவியில் ஜோதிமனோன் மணியுமானாய்கண்டதொரு காட்சிகளைச் சொல்லப் போமோகாரணியே பூரணியே கன்னியாளேவிண்டதொரு மகிமைகளை வெளிவிடாமல்வேண்டியதோர் தீட்சைகளை முடித்துவைப்பாய்தொண்டர்களை எப்போதும் ஆள்வாயம்மாசோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !7-வது படி சப்தமி ஸ்ரீ  குலசுந்தரி தேவிகாலான சந்திரகலை நாலுங் காட்டிகண்மூடி நிற்குமுன்னே சோதி காட்டிமாலான அரிதனையு மங்கே காட்டிமறைந்துநின்ற சுயரூப மங்கே காட்டிபாலான சோமகலைப் பாலுங் காட்டிபாங்குடனே எனைவளர்த்த பருவமாதாசூலான தாய்வயிற்றில் சொரூபம்தந்தசோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !8-வது படி அஷ்டமி ஸ்ரீ  த்வரிதா தேவிநீதமுடன் உருவாகி அரூபமாகி நிஷ்களமாய் நிராமயமாய் நின்ற சூலிவேதமுடிவாகிநின்ற விமலிந் தாயேவிண்ணொளியாய்ப்பரவெளியாய்க் கண்ட சக்திபாத்மதில் சிலமபுகளில் கலில் என்றோதபக்தருக்காய்ப் பிரசன்ன மாகும் ரூபிசோதனையாய்ச் சோமகலையாக வந்தசோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !9-வது படி நவமி ஸ்ரீ  சிவதூதிதிங்களொளியாய் அமர்ந்தசப்தகன்னிதேவர்களுக் கமுதளித்த சிறு பெண்ணாத்தாள்அங்கசித்தி ரீங்காரி அனந்த ரூபிஅண்டரெல்லாம்போற்றவதரித்ததேவிமங்கலமாய் நவராத்திரி பூசைக்காகவந்தமர்ந்த திரிசூலி மகிழோங் காரிதுங்கமிகு முயர்பரமானந்திதாயேசோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !10 – வது படி தசமி ஸ்ரீ  மஹாவஜ்ரேஸ்வரி தேவிபந்தவினை போக்கிடுமென் அருமைத்தாயேபாக்யவதி பூரணியே பருவ மாதாவந்துநீ அருள்க எனை வளர்த்த மாதாவான்வழங்கப் பெற்ற சுடரொளியே கண்ணேஎன்றனையும் சித்தனெனப் பெயருமிட்டேஎட்டெழுத்தின் மூன்றெழுத்தாய் விளங்கி நின்றாய்சுந்தரியே கன்னிகையே அகண்ட ரூபிசோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !11 – வது படி ஏகாதசி ஸ்ரீ  வஹ்ளிவாஸினிஉன்னுடைய கிருபை வைத்துத் தவத்தைப் பெற்றேஒன்றாகி இரண்டாக ஆறுமாகிதன்னுடைய தீக்ஷைவைத்து ஞானம் தந்தசங்கரியே சாம்பவியே சாகாக் காலேகன்னிகையே மதுராசமான தேவிகற்பகமே கனகப்ரகாசமானதுன்னுதிரு சுழிமுனையி லாடுந் தேவிசோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !12 – வது படி துவாசதி ஸ்ரீ  பேருண்டாதேவிபஞ்சமியில் உலகமெல்லாம் பெற்ற தாயேபரப்பிரம்ம மானதொரு பாக்ய ரூபிதஞ்சமென்ற சித்தர்களைக் காக்கும் சக்திதமியேனை ஈடேறச் செய்வாய் தாயேபஞ்சையாய்த் தொண்ணூற்றாறு தத்துவத்தைபரக்கடித்த சுமங்கலியே ரிஷிகள் தம்மைதுஞ்சுதலற் றென்றென்றும் இருக்கச் செய்தாய்சோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !13 – வது படி த்ரயோதசி ஸ்ரீ  நித்யக்லின்னா தேவிமதியான நாலகலை யான ரூபிமாதாவே வரபிரசாதங்கள் தந்துகதிபெறவே செய்த பூரணியே அம்மாகிருபையுடன் தவநிலையே காட்டி வைத்தாய்பதிவான கலை நாலும் பாழ் போகாமல்பாக்கியங்கள் தந்தருளும் பரையே சித்தர்துதிதனையே பெரிதென்று நினைக்கும் தேவிசோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !14  – வது படி சதுர்தசி ஸ்ரீ  பகமாலினி தேவிவாழ்வான உலகமெல்லாம் நீயே யம்மாமண்டலங்கள் எங்கெங்கும் வளர்த்த சோதிதாழ்வேது உனையடைந்த சித்தர்க்கெல்லாம்தங்கமயமாய் இருந்த தேவி ரூபிபாழ்போகா வாக்கு நல்ல சித்தி தேந்துபாக்கியமே அடங்காத அண்டத் துடேசூழ்ந்திருந்து மகிழ்ந்தென்னைப் பெற்ற மாதாசோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !15 – வது படி அமாவாசை ஸ்ரீ  காமேஸ்வரி தேவிசேமமது தரவெனக்குநேரே வாவாதிரிபுரையே சாம்பவியே மணப்பதுவாணிகாமனையும் வாமனையும் படைத்த தாயேகன்னிகையே வளர்பிறையே கனக மாதாநீ மறைவாய்நின்றதென்ன நினைவே யம்மாநீடூழி காலமெல்லாம் நினைவே யாகி என்றென்றும் என்னை காப்பாய் மாதாசோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !ஆன்மீக பலன் வாசகர்கள் அம்பாளின் அருளை பெற திதிகளை போற்றி வாழ்வில் வசந்தத்தை பெறுங்கள். குடந்தை நடேசன்…

The post துதிப்போம் திதிகளை… appeared first on Dinakaran.

Tags : Tithi ,darshan ,Ambala ,Sage Agastya ,
× RELATED அரியானாவில் பாஜ வேட்பாளரை விரட்டியடித்த விவசாயிகள்