×

உறவினருக்கு சீட் கொடுத்து சிட்டிங் எம்எல்ஏவுக்கு கல்தா கொடுத்த இலையின் தந்திரம் குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கெத்து காட்டிய காக்கி அதிகாரியை… வெத்து ேவட்டாக மாற்றிய சாதாரண காக்கிகள் செய்த தந்திரம் தான் பெரிய அளவில் பேசப்படுதாமே, உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து நெல்லை மாநகரத்தில் பொறுப்பேற்ற தமிழ் கடவுள் பெயரை கொண்ட இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்ற நாளிலிருந்து தனக்கு கீழே வேலை பார்க்கும் போலீசாரை தரக்குறைவாக நடத்தினாராம். அங்கு, பெண் காவலர் ஒருவரை வசை பாடினாராம். அந்த பெண் காவலர், சக காவலர்களிடம் தனது புலம்பலை கொட்ட சக காவலர்கள் தேற்றினார்களாம்.இந்நிலையில் ரோல் காலுக்கு வந்த போது எஸ்ஐ மற்றும் போலீசாரிடம் இன்ஸ்பெக்டர் தனது பராக்கிரமங்களை பெரிய லெக்சர் அடித்தாராம். இதை ரொம்பவே பொறுமையாக கேட்ட போலீசார் அதற்கு பிறகு எடுத்த முடிவு தான் இன்ஸ்பெக்டரை நார் நாறாக கிழித்து தொங்கவிட்டதாம். அதாவது, நான் ரொம்ப கறார் பேர் வழியாக்கும். முன்னாள் போலீஸ் டிஜிபி ஒருவரையே என்னை வந்து பார் என்றேன்… அவர் மிரண்டு போய் என்னை வந்து பார்த்தார் என ஸ்டண்ட் அடித்தாராம். இதை ஏன் எங்களிடம் சொல்கிறீர்கள்… நீங்க யாரு.. என்ன ெசய்து இருக்கீங்க… உங்க மேலே என்ன புகார் இருக்கு என்ற எல்லா விவரமும் எங்களிடம் இருக்கு… சும்மா அலட்டிக் கொள்ளாதீங்க… என்று சொன்னாங்களாம்… அதை கேட்ட இன்ஸ்பெக்டர் கப்சிப்பாக மாறி அங்கிருந்து இடத்தை காலி செய்தாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘உளவுத்துறையை ைவத்து எம்எல்ஏவை கண்காணிப்பது அந்த காலம்… உறவினரையே உளவுத்துறையாக மாற்றிய இலை கட்சியை பற்றிச் சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் இலைகட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் நாயகமானவர். இவர் சிட்டிங் எம்எல்ஏவின் உறவினராம்… வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மீண்டும் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் சீட் கிடைக்க வில்லையாம். இதனால் அவர் சென்னையில் முகாமிட்டு இருப்பதாகவும் தொகுதிக்குள் பரவலாக பேசிக்கிறாங்களாம்… சிட்டிங் எம்எல்ஏவை தொடர்பு கொண்ட அவரது ஆதரவாளர்களிடம், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா அணி, எடப்பாடி அணி தனித்தனியாக பிரிந்த போது சிட்டிங் எம்எல்ஏ சசிகலா அணிக்கு ஆதரவாக இருந்து வந்தார். சட்டமன்றத்தில் சசிகலா அணிக்கு ஆதரவாக இருந்த 18ம் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது, சிட்டிங் எம்எல்ஏ உள்ளிட்டோர் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை. விளக்கம் கேட்டு மட்டும் நோட்டீஸ் அனுப்பட்டது. டிடிவிக்கு ஆதரவு நிலையில் இருந்து வெளியில் வந்து அமைதியாக இருந்தவர் பதவியை தக்க வைத்துக்கொள்ள இலைகட்சி பக்கம் மீண்டும் தாவினார். இதெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு சிட்டிங் எம்எல்ஏவை பழி வாங்குவதற்காக தான் இலைகட்சி தலைமை சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் சீட்டு கொடுக்கவில்லை என கட்சிக்குள் பேசிக்கிறாங்களாம்… ஆனால் அது உண்மை இல்லையாம்… இவர் அதிமுகவில் இருந்தாலும் குக்கர் கட்சியுடன் ரகசிய ெதாடர்பில் இருந்ததை அவரது உறவினரை வைத்து இலை தலைமை கண்டுபிடித்ததாம்.. உறவினரையே உளவுத்துறையாக பயன்படுத்தியதால் தான் சிட்டிங் எம்எல்ஏ சீட் பறிபோச்சாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாம்பழ மாவட்டத்துல அதிருப்தியில உள்ள இலையின் முக்கிய நிர்வாகிகளுக்கு பெரிய ‘லக்கி பிரைசஸ்’ அடிக்கப் போகுதாமே… எல்லோரும் கரன்சியில குளிக்கப்போறாங்களாமே, அப்படியா…’’என்றார் பீட்டர் மாமா. ‘‘இலையும், மாம்பழமும், தாமரையும் கூட்டணி போட்டு ஒரு வழியா தொகுதிகளை பிரிச்சிருக்கு. மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத சிட்டிங் எம்எல்ஏக்கள், எம்ஜிஆர் காலத்து மாஜிக்கள் என்று அனைவரும் தனித்தனியா போட்டியிட ஆலோசனை நடத்திக்கிட்டு இருக்காங்களாம். இதனால் அதிர்ந்து போன சேலத்துக்காரர், மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை சந்திச்சு சமரசம் செய்ய முடிவு பண்ணியிருக்காராம். இதை தனது சொந்த ஊரான மாங்கனி மாவட்டத்தில் இருந்து துவக்கப்போறாராம். இதில் முட்டை மாவட்டத்து மாஜி ஒருவரை போனில் அழைத்து, வெற்றிக்காக வேலை பாருங்கள். நம்ம வேட்பாளர் ஜெயித்தால், நீங்களே எதிர்பார்க்காத பெரிய பரிசு ஒண்ணு கிடைக்கும் என்றாராம். இதேபோல் முக்கிய நிர்வாகிகள் பலரை, குளிர வைக்கும் திட்டமும் விவிஐபியின் மைன்டில் இருக்காம்..’’ எ ன்றார் விக்கியானந்தா. ‘‘கோவையின் அரசியல் உள்குத்து பற்றி சொல்லுங்களேன்… எம்எல்ஏ மகனை இலை தலைமை கட்டம் கட்டப்போகுதாமே உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை ெதற்கு தொகுதி இலை. எம்.எல்.ஏ. அதே தொகுதியில் போட்டியிட, தன்னை தயார்படுத்தி வந்தார். கட்சி தொண்டர்களிடமும் அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி உத்தரவிட்டார். அதன்படி, ேதர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, திரைமறைவில் எல்லா ஏற்பாடுகளும் நடந்து வந்தன. இதற்கிடையில், இலை கூட்டணியில், இத்தொகுதி தாமரைக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், தனக்கு சீட் கிடைக்காமல் போய்விடுமோ என அஞ்சிய சிட்டிங் எம்எல்ஏ சென்னைக்கு பறந்தார். இதையடுத்து, தொகுதி மாறி போட்டியிட கட்சி தலைமை அவருக்கு அனுமதி அளித்தது. அதேநேரம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்வரை அமைதி காக்க வேண்டும் எனவும் மேலிட உத்தரவு போட்டது.ஆனால், சிட்டிங் எம்எல்ஏவின் மகன், இலை  தொண்டர்கள் சுமார் 50 பேரை ஒன்றுதிரட்டி, கட்சி தலைைமக்கு எதிராக கோஷம் முழங்கியது. சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் அதே தொகுதியில் சீட் வழங்காவிட்டால், கட்சி பதவியை ராஜினாமா செய்வோம் என மிரட்டல் வேறு. இதை ஒரு முன்னுதாரணமாக கொண்டு, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்த துவங்கினர். பிள்ளையார் சுழி இங்கிருந்துதான் போடப்பட்டது என்பதால், கட்சியின் மேலிடம் கடுப்பாகிவிட்டது. கட்சிக்குள் இருந்துகொண்டே தில்லாலங்கடி வேலை செய்தவர்களை களையெடுக்க, மாஸ்டர் பிளான் தயாராகி வருகிறது. அந்த லிஸ்டில், ச.ம.உ. மகன் முதலிடத்தில் உள்ளார்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post உறவினருக்கு சீட் கொடுத்து சிட்டிங் எம்எல்ஏவுக்கு கல்தா கொடுத்த இலையின் தந்திரம் குறித்து சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Kaltha ,MLA ,wiki Yananda ,
× RELATED ஜூன் 3ல் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை கோ.தளபதி எம்எல்ஏ அறிவிப்பு