×

சகல கலைகளும் அருளும் பிரம்ம வித்யாம்பிகை – திருவெண்காடு

தமிழக சக்தி பீடங்கள்காவிரிக் கரையில் உள்ள ஆறு சிவத் தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவெண்காடு தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருசாய்க்காடு (சாயாவனம்), 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும். சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. கோயிலைச் சுற்றி நான்கு தேரோடும் வீதிகள் உள்ளன. கோயில் உள்ளே நான்கு பிராகாரங்கள் இருக்கின்றன. இந்த ஆலயத்திற்கு கிழக்கிலும் மேற்கிலும் ராஜ கோபுரங்கள் உண்டு. இத்தலத்திலுள்ள சக்திகள் மூன்று – பிரம்ம வித்யா நாயகி, காளி தேவி, துர்க்கை. இத்தலத்தில் உள்ள தீர்த்தங்கள் மூன்று – சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம் இத்தலத்தில் உள்ள தல விருட்சங்கள் மூன்று – வட ஆல விருடம், வில்வம், கொன்றை.திருவெண்காடரின் சக்தியாகப் பிரம்ம வித்யாம்பிகை என்ற பெரிய நாயகி எழுந்தருளி இருக்கிறார். திருநாங்கூரில் உள்ள மதங்காசிரமத்தில் மதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி, மாதங்கி என்ற திருப்பெயருடன் திருவெண்காடரை நோக்கித் தவமிருந்து, அவரைத் தனது  நாதராக இத்தேவி அடைந்தார் என்று பத்மபுராணம் கூறுகிறது. பிரம்மனுக்கு வித்தைகளை கற்பித்ததால் பிரம்ம வித்யாம்பிகை என்னும் திருப்பெயர் பெற்றாள். திருஞான சம்பந்தர், திரு வெண்காட்டின் வட எல்லைக்கு வந்த பொழுது அவருக்கு ஊரெல்லாம் சிவ லோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் காட்சியளிக்க, இத்தலத்தினை மிதிப்பதற்கு அஞ்சி அவர் ‘அம்மா’ என்றழைக்க, பிரம்மவித்யாம்பாள் அங்கு தோன்றி, தனது இடுப்பில் திருஞானசம்பந்தரை இடுக்கிக் கொண்டு கோயிலுக்குள் சென்றாள். 51 சக்தி பீடங்களில் இத்தலம்  பிரணவபீடம் என போற்றப்படுகிறது.  தேவி கல்வி வரம் தருவதில் நிகரற்றவள். வரப்ரசாதியாய் திகழ்ந்தருளும் திருத்தலம் இது. ஆளுடைய பிள்ளையை இடுப்பில் சுமந்த வடிவில் அம்பாள் சிலை கோயிலின் மேற்கு உட்பிராகாரத்தில் உள்ளது. சம்பந்தர் அம்பாளை நின்று கூப்பிட்ட குளக்கரை குளம் ‘கூப்பிட்டான் குளம்’ என்று அழைக்கப்பட்டு, இன்று ‘கோட்டான் குளம்’ என்று மறுவிவிட்டது. அம்பாள் கோயில் மண்டபத்தின் இடப்பகுதியில் புதனுக்கு தனிக் கோயில் உள்ளது. புதன் கிரகம் புத்திக்கு அதிபதி. கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை என சகல கலைகளிலும் மேன்மை அளிப்பவர். புதனுக்கு விடியற்காலையில் உரிய முறையில் சாந்தி செய்து, கந்தபுராணம், புதகவசம், ஆகியவற்றைப் பாராயணம் செய்தால் புதன் அருளைப் பெறலாம்’’. அக்கினி, சூரியன், சந்திரன் ஆகிய பெயருடன் மூன்று தீர்த்தங்கள் மூன்றும் காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி தேவிகளுக்கு உரியதாம். உமையவள் ஆசைப்பட்டபடி நடராஜர் இங்கே ஆடினாராம். அப்போது அவருடைய ஆனந்தக் கண்ணீராகச் சிந்திய மூன்று துளிகள் மூன்று திருக்குளங்களாக மாறியதாக அழகிய கதை ஒன்றும் சொல்லுகிறார்கள். இங்கே நீராடினால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழித்தடத்தில், சீர்காழியில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் திருவெண்காடு சிவத் தலம் இருக்கிறது….

The post சகல கலைகளும் அருளும் பிரம்ம வித்யாம்பிகை – திருவெண்காடு appeared first on Dinakaran.

Tags : Brahma ,Vidyambikai ,Tamil Nadu ,Kaveri ,Kashi ,Tiruvenkadu ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...