×

நாத வடிவான நமசிவாயம்

இசை வடிவானவன் இறைவன்இயங்கும் உலகின் தலைவன்நாதவடிவானவன் நமச்சிவாயம்நற்குண ராகத்தின் முதல்வன்!கோடை தென்றல் சந்திரன் கொண்டல்வள்ளல் இந்திரன்!மல்லிகை சூழ்ந்த மணம்மருவிலா தூய எண்ணம்மயக்கமிலா நற்செயல்மலர் பாதம்  சேர்த்துமகேசன் பொன்னடி வாழ்த்திமன பக்தியில் கங்கை நீராடு!கோயில் மணி இசையில்கோள் பூமி விழித்திடும்கையுடுக்கை ஓசையில்பொடிப்பொடியாகும் தீவினை!இடக்கை எழுப்பும் ஒலியில்இடரெல்லாம் விலகும் சிவமே!மேளம் பிரம்மதாளம்எக்காளம் தாரைகொக்கரை சங்குகொம்பு குழல்வீணை மத்தளம்சேமக்கலம் நகரா முழங்கஉறுமி  நாதஸ்வரம் கூடியதிருக்கயிலாய இசைக்குதிருநடனமாடும் தில்லைநாதன்திருவடி பணிய மேன்மைதரும்!திருநீறு சிந்தி சைவ ஆறாகும்!இசையில் உருகும் உயிர்இறைபதம் கலந்தபின்னேஇல்லறத்தை மனம் நாடுமா?இறைபூசையில் கலந்த மலர்மீண்டும் செடியை சேருமா!இன்னுமோர் பிறவி விரும்புமா!ஊழிக்காலம் நெருங்கும்போதுஆழிஅலைகள் பொங்கிடும்தர்மம் விலகியோடிகர்மபூமி காடாகிடும்உயரம் குறைந்துமனிதயினம் முறைகள்தவறி வாழ்ந்திடும்!காமப்பேய் பிடித்தமனம்கள்ளருந்தி மயங்கிடும்ஆலங்காட்டில் ஆடும் இறைவன்அறம்மீட்டு காத்திடுவான்அச்சமின்றி மக்கள் வாழசித்தர் மீண்டும் தோன்றுவர்!நடராஜன் ஆணைப்படிநலம் பெறும் நானிலம்மறைத்துநின்ற மேகம்விலகிஇசைவேதம் நிலைத்திடும்!தொகுப்பு: விஷ்ணுதாசன்

The post நாத வடிவான நமசிவாயம் appeared first on Dinakaran.

Tags : Namasivaya ,Shivaya ,
× RELATED மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்