×

ஆவணி ராமலிங்கேஷ்வரசுவாமி கோயில் பிரம்மோற்சவம்நாளை நடக்கிறது

முல்பாகல்: கோலார் மாவட்டத்தில் பழமையான ராமலிங்கேஷ்வரசுவாமி கோயில் பிரம்மோற்சவம் நாளை ேகாலாகலமாக நடக்கிறது. மாவட்டத்தின் முல்பாகல் தாலுகா, ஆவணி கிராமத்தில் சோழமன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டியுள்ள ராமலிங்கேஷ்வரசுவாமி கோயில் உள்ளது. இத்திருத்தலம் அமைந்துள்ள இடம் இராமாயண காவியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இராமன், லட்சுமணன், சீதை ஆகிேயார் வாழ்ந்த இடமாகவும், அஸ்வமேத யாகத்தில் பங்கேற்ற குதிரைகளை அடக்கி லவ-குசா ஆகிய இருவர் பிறந்த புண்ணிய பூமியாகவும் ஆவணி விளங்குகிறது. இக்கோயில் பிரம்மோற்சவம் ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி பண்டிகை முடிந்து வரும் அமாவாசை நாளில் நடத்தப்படுகிறது. பிரமோற்சவம் நடப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பே கொடியேற்றதுடன் தொடங்குகிறது. இவ்வாண்டு பிரம்மோற்சவம் நாளை நடக்கிறது. உற்சவ மூர்த்தியுடன் கிராம தேவதையின் தேர் ஊர்வலம் நடக்கிறது. வனமும் செங்குத்தான பாறைகளின் ஏறி, அதன் நடுவில் உள்ள இராமன், லட்சுமணன், சீதை வாழ்ந்த வீடு, லவ-குசா ஆகிய இருவர் பிறந்த இடத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு கோலார் மாவட்டத்தின் அனைத்து தாலுகாவில் இருந்து 178 சிறப்பு பஸ்களை மாநில அரசு போக்குவரத்து கழகம் இயக்குகிறது. ேமலும் இக்கோயில் திருவிழாவில் முக்கிய சந்தையாக கால்நடை சந்தை உள்ளது. கர்நாடகம் மட்டுமில்லாமல் தமிழகம், ஆந்திரா மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் பசு, காளைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். தற்போது சந்தை சிறப்பாக நடந்து வருகிறது….

The post ஆவணி ராமலிங்கேஷ்வரசுவாமி கோயில் பிரம்மோற்சவம்நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Avani ,Ramalingeshwaraswamy ,Temple ,Brahmotsavam day ,Mulbagal ,Brahmotsavam ,Kolar district ,Ramalingeshwaraswamy temple ,Brahmatsavam day ,
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...