×

செல்வ லட்சுமியின் அருட்பார்வை

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மாஎனக்கு 67 வயது ஆகிறது. என் மகளுக்கு கடந்த நான்கு வருடங்களாக வரன் பார்த்து வருகிறேன். ஒன்றும் அமையவில்லை. என் மகளுக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? உரிய வழி சொல்லுங்கள்.- பார்த்தசாரதி, திருவள்ளூர்.கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் புதன் புக்தி தொடங்கி உள்ளது. தற்காலம்தான் அதாவது 01.12.2020 முதலே உங்களுடைய மகளுக்கு திருமண யோகம் என்பது துவங்கி உள்ளது. அவருடைய ஜாதகத்தில் திருமண பாக்யத்தைத் தரும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி புதன் என்பதாலும், ஒன்பதாம் பாவமாகிய பாக்ய ஸ்தானத்தில் புதன் அமர்ந்திருப்பதாலும் நல்ல நேரம் என்பது தொடங்கிவிட்டது. உங்கள் மகளின் ஜாதகத்தில் ஏழில் செவ்வாய் இருந்தாலும் குருவின் பார்வையைப் பெறுவதால் தோஷம் என்பது கிடையாது. அவருடைய மனதிற்குப் பிடித்தமான வகையில் வரன் என்பது வெகுவிரைவில் அமைந்துவிடும். தற்சமயம் கல்யாண யோகம் தொடங்கிவிட்டதால் முழு வீச்சில் நீங்கள் பார்க்கத் துவங்கலாம். இன்னும் இரண்டு மாதத்திற்குள் வரன் அமைந்து நிச்சயம் செய்துவிடுவீர்கள். பரிகாரம் ஏதும் தேவையில்லை.?நான் ஒரு கையும் காலும் இழந்த மாற்றுத் திறனாளி. எனது ஒரே மகன் தயவில் வாழ்ந்து வருகிறேன். வருமானம் ஏதும் கிடையாது. மீதம் உள்ள காலம் எப்படியிருக்கும்? இதுநாள் வரை எனக்கு குலதெய்வமும் தெரியாது, கோத்திரமும் தெரியாது. முன்னோர்கள் யாரும் கூறவில்லை. அதனையும் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.- ராஜேந்திரன், சென்னை.சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. கோத்திரம் என்ன என்பதை உங்கள் முன்னோர்கள்தான் சொல்ல வேண்டும். ஜனன ஜாதகத்தைக் கொண்டு அதனைத் தெரிந்துகொள்ள இயலாது. கோத்திரம் தெரியாதவர்கள் காஸ்யப கோத்திரத்தைப் பின்பற்றலாம் என்பது சாஸ்திர வாக்கியம். உங்கள் குடும்ப புரோஹிதரிடம் கேட்டு அதன்படி கோத்திரத்தை பின்பற்றி வரவும். உங்கள் ஜாதகத்தில் ஐந்து மற்றும் ஒன்பது ஆகிய பாவகங்களை ஆராய்ந்து பார்க்கும்போது பெருமாள் உங்கள் குலதெய்வமாக இருக்கலாம் என்பதும் அதுவும் பாம்பணையில் படுத்துக் கொண்டிருக்கும் பெருமாளாக இருக்கலாம் என்பதும் புலனாகிறது. உங்கள் வசிப்பிடத்தைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் உங்களுடைய குலதெய்வமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏதேனும் ஒரு சனிக்கிழமை நாளில் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆலயத்திற்கு காலையில் விஸ்வரூப தரிசனம் நடக்கும் நேரத்திற்குச் சென்று தரிசனம் செய்யுங்கள். ஆலய வளாகத்திற்குள் சிறிது நேரம் அமர்ந்திருங்கள். அங்கே உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்கள் மற்றும் உங்களைச் சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளின் மூலமாக உண்டாகும் சகுனங்கள் ஆகியவற்றைக் கொண்டு அவரே உங்கள் குலதெய்வம் என்பதை நீங்கள் முடிவு செய்துகொள்ள இயலும். வருமானம் ஏதுமின்றி மகனின்தயவில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். மாற்றுத் திறனாளியான நீங்கள் உங்களைச் சுற்றியுள்ளோருக்கு நல்ல ஆலோசகராகவும் அடுத்தவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகவும் விளங்குவீர்கள். குலதெய்வத்தை வழிபட்டு மனத்தெளிவு பெறுங்கள். உங்கள் வாழ்நாளில் எஞ்சியுள்ள காலம் என்பது நல்லபடியாகவே அமையும். ?என் மகனுக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகப் போகிறது. நீண்ட காலமாக ஒரு நிலையான வேலை அமையாமல் மிகுந்த மன உளைச்சலில் அல்லாடுகிறான். திருமணத்திற்குப் பின் சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை செய்து கொரோனாவால் வேலையைத் தொடர இயலவில்லை. அவனுக்கு ஒரு நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?- பொன்முடி, திருவண்ணாமலை.பூசம் நட்சத்திரம், கடக ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது புதன் தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதக பலத்தின்படி தற்போது நடந்து வரும் நேரம் என்பது நன்றாக உள்ளது. உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் ஜீவன ஸ்தானம் ஆகிய பத்தாம் இடத்திற்கு அதிபதி சுக்கிரன் ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்திருப்பதும், ஜென்ம லக்னாதிபதி சனி வெற்றியைத் தரும் 11ல் அமர்ந்திருப்பதும் நல்ல நிலையே ஆகும். அடுத்தவர்களிடம் கைகட்டி வேலை பார்ப்பதை விட இவர் சொந்தமாகவே தொழிலை அமைத்துக் கொள்ள இயலும். வண்டி, வாகனங்கள் சம்பந்தப்பட்ட இன்ஷ்யூரன்ஸ் அல்லது வங்கிகளில் கடன் பெற்றுத் தரும் ஏஜெண்ட் ஆக செயல்பட இயலும். அத்துடன் நிதித்துறை சார்ந்த பணிகளையும் சேர்த்துச் செய்ய இயலும். அவிட்டம் நட்சத்திரம், மகர ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகளின் ஜாதகப்படியும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் வேலை கிடைக்கும் அம்சம் என்பது நன்றாக உள்ளது. இவர்கள் இருவரின் ஜாதகங்களும் நன்றாகவே உள்ளது. தோஷம் ஏதுமில்லை. தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமை நாட்களில் கோபூஜை செய்து வணங்கி வரச் சொல்லுங்கள். செல்வலட்சுமியின் அருட்பார்வை அவர்கள் மீது விழத் துவங்கும். ?31 வயதாகும் என் மகனுக்கு பல ஜாதகங்கள் பார்த்தும் ஒன்றும் கூடி வரவில்லை. தற்போது ஒரு ஜாதகம் வந்து பெண் பிடித்து நிச்சயம் செய்த நிலையில் அந்தப் பெண் வேறு யாரையோ விரும்புவதால் எனது மகனை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். மகனைப் பெற்ற எங்களுக்கு இது பேரிடியாக அமைந்தது. என் மகனுக்கு நல்ல மனைவி வரப்பெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?- சேகரன், ஆற்காடு.கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவக அதிபதி மூன்றில் நீசம் பெற்றிருப்பது களத்ர தோஷத்தினைத் தருகிறது. அதோடு மூன்றாம் பாவக அதிபதி சந்திரனும் ஏழில் நீசம் பெறுவது திருமணத் தடையை உண்டாக்குகிறது. சந்திரனும் செவ்வாயும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தாலும் இருவரின் நீச பலம் என்பது சற்று சிரமத்தினைத் தரத்தான் செய்யும். அதே நேரத்தில் லக்னத்தில் இருக்கும் குருவின் பார்வை ஏழாம் பாவகத்தின் மீது விழுவதால் தோஷம் என்பது நிவர்த்தி ஆகிறது. களத்ர தோஷம் என்பது மறுவிவாகம் செய்யும் அதிகாரத்தைத் தந்தாலும் குருவின் பார்வை அந்த தோஷத்தை நிவர்த்தி செய்திருக்கிறது. உங்கள் மகனுக்கு கிட்டத்தட்ட திருமணத்திற்கு ஒரு பெண்ணை பேசி உறுதி செய்த நிலையில் திருமணம் நடக்காமல் போனது கூட ஒரு வகையில் பரிகாரம் தான். அதனால் நடந்ததைப் பற்றிக் கவலைப்படாமல் இனிமேல் நடப்பதெல்லாம் நல்லபடியாகவே அமையும் என்ற எண்ணத்துடன் பெண் தேடுங்கள். தாங்கள் ஏற்கெனவே கடைபிடித்து வரும் முருகப்பெருமானுக்கு உரிய விரதங்களும் பூஜைகளுமே போதுமானவை. மகனின் திருமணத்தை முருகப்பெருமானின் சந்நதியிலேயே வைத்துக் கொள்வதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வருகின்ற வைகாசி விசாக வாக்கில் மகனின் திருமணம் முடிவாகிவிடும். கவலை வேண்டாம்.?நான் செய்து வந்த வியாபாரம் நல்ல நிலையில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தது. சென்னை செல்வது, வியாபாரம் செய்வதுமாக இருந்து வந்தேன். கடந்த சில ஆண்டுகளாக வம்பு, வழக்கு, கோர்ட் கேஸ் பிரச்னை என்று நிலைமை சரியில்லாமல் போய்விட்டது. இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?- வள்ளியப்பன், காரைக்குடி.கார்த்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. ராகு தசையின் காலம் வரை கொடி கட்டிப் பறந்த நீங்கள் தற்போது நடந்து வரும் குரு தசையில் பிரச்னைகளை சந்தித்து வருகிறீர்கள். உங்கள் ஜாதகத்தில் சத்ரு, ரோக, ருண ஸ்தானம் ஆகிய ஆறாம் வீட்டிற்கு அதிபதி குரு வக்ரம் பெற்ற நிலையில் ராகுவின் சாரம் பெற்று ஜென்ம லக்னத்திலேயே சஞ்சரிப்பது பிரச்னையைத் தந்திருக்கிறது. அதிலும் தற்போது சனி புக்தியும் நடந்து வரும் நிலையில் மேலும் பல சோதனைகளை சந்திக்க உள்ளீர்கள். தற்போதைய சூழலில் நீங்கள் உங்கள் தொழிலின் அடிப்படைத் தன்மை மாறாமல் அதே நேரத்தில் அதனை வேறு முறையில் மாற்றிக் கொள்வது என்பது நல்லது. உதாரணத்திற்கு நிதித்துறை சார்ந்த தொழிலைச் செய்து வந்தால் அதில் உள்ள மற்றொரு துறையை கையில் எடுத்துக் கொள்வது நல்லது. ராகு தசையில் கண்ட வருமானத்தை இனிமேல் எதிர்பார்க்க இயலாது. என்றாலும் உங்களது தேவைகளையும் பிரச்னைகளையும் சமாளிப்பதற்கு பெரிதும் துணைபுரியும். குருவின் அனுக்ரஹம் ஒன்றே உங்களைக் காப்பாற்றும் என்பதால் நீங்கள் குருவாக நினைப்பவரை வணங்கி வாருங்கள். ஆன்மிக மடங்கள், ஆலயங்கள், ஆசிரமங்கள் ஆகியவற்றிற்கு தொண்டு செய்வதன் மூலம் குருவின் அனுக்ரஹத்தைப் பெற இயலும். வியாழக்கிழமை நாளில் குன்றக்குடி தலத்திற்குச் சென்று இறைவனை வழிபட்டு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிரச்னையின் தீவிரம் குறையும்….

The post செல்வ லட்சுமியின் அருட்பார்வை appeared first on Dinakaran.

Tags : Selva Lakshmi ,Thirukovilur Hariprasad Sharma ,
× RELATED செல்வ லட்சுமியின் அருட்பார்வை