×

தில்லையம்பல நடராஜா

திருக்குற்றாலம் சித்திரசபையிலும், திருநெல்வேலி தாமிரசபையிலும், மதுரை வெள்ளிச்சபையிலும், சிதம்பரம் கனகசபையிலும், திருவாலங்காட்டில் ரத்னசபையிலும் நடராஜப் பெருமான் திருநடனம் புரிகிறார். நடராஜரின் பிரம்ம தாண்டவத்தை திருமுருகன்பூண்டியிலும், ஊர்த்தவ தாண்டவத்தை அவிநாசியிலும், சுந்தர தாண்டவத்தை மதுரையிலும், அஜபா தாண்டவத்தை திருவாரூரிலும், ஆனந்த தாண்டவத்தை தில்லையிலும் தரிசிக்கலாம். திருவிற்கோலம் எனும் தர்ப்பைக்காட்டிலும், திருப்போரூர் எனும் மூங்கிற்காட்டிலும், திருவெவ்வூர் எனும் ஈக்காட்டிலும், திருவெண்பாக்கம் எனும் இலந்தைக்காட்டிலும், திருவாலங்காடு எனும் ஆலங்காட்டிலும் ஆடும் பரம் பொருள், நடராஜர். திருநெல்வேலியில் காளிகா தாண்டவம், திருப்பத்தூரில் கவுரிதாண்டவம், குற்றாலத்தில் திரிபுரதாண்டவம், திருவாலங்காட்டில் ஊர்த்வதாண்டவம், தில்லையில் ஆனந்த தாண்டவம் எனும் ஐவகை தாண்டவங்களைப் புரியும் வடிவில் நடராஜர் விளங்குகிறார். சித்திரை திருவோணம் உச்சிக்காலம், ஆனி உத்திரம் பிரதோஷ காலம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி மாலைசந்தி, புரட்டாசி வளர்பிறை அர்த்தஜாமம், மார்கழி திருவாதிரை உஷத்காலம், மாசி வளர்பிறை காலைசந்தி ஆகியவை நடராஜப் பெருமானின் அபிஷேக காலங்களாகும். சிதம்பரம் கருவறையின் வலதுபுறம் சிதம்பர ரகசியம், பொன் கூரையின் கீழ் நடராஜப்பெருமான், ஸ்படிகலிங்கம் என மூன்று வடிவங்களில் நடராஜர் அருள்கிறார். சிற்றம்பலத்திற்கு எதிரே உள்ள எதிரம்பலம் எனும் இடத்தில்தான் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறும். இதுதான் கனகசபை. உற்சவ மூர்த்தங்கள் எழுந்தருளியுள்ள இடம் பேரம்பலம்  என்ற தேவசபை. ஊர்த்வதாண்டவ மூர்த்தங்கள் தேரம்பலத்தில் உள்ளன. இது கொடி மரத்தின் தென்புறம் உள்ளது, நிருந்தசபை எனப்படுகிறது. ஆனித் திருமஞ்சனமும், மார்கழி ஆருத்ரா திருமஞ்சனமும் நடக்குமிடம் ஆயிரம்கால் மண்டபம். இது ராஜசபை. புஜங்கலலிதம், காலசம்ஹார மூர்த்தி, கங்காள மூர்த்தி, பிட்சாடன மூர்த்தி, திரிபுரசம்ஹார மூர்த்தி, பைரவர், உத்திராபதியார் ஆகிய  சிற்பங்களை தஞ்சையிலுள்ள திருச்செங்காட்டங்குடியில் தரிசிக்கலாம். ஒரே கல்லால் வடிக்கப்பட்ட நடராஜரின் அற்புத திருவுருவை ஸ்ரீவில்லிபுத்தூருக்கருகில் உள்ள மடவார்விளாகம் வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் உள்ளது. சுந்தரமூர்த்தி நாயன்மாருக்காக நடராஜர் தன் தில்லைத் திருநடனத்தை பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் ஆடிக் காட்டியதால் பேரூர் நடராஜர், குடகத் தில்லை அம்பலவாணன் எனப்படுகிறார். அருணகிரிநாதருக்காக ஆறுமுகன் நடராஜ தாண்டவத்தை ஆடிக்காட்டியதை நினைவுகூற திருச்செந்தூர் ஏழாம் நாள் பெருவிழாவில் ஷண்முகர் சிவப்பு சாத்தி பின்புறம் நடராஜ திருக்கோல தரிசனம் தருகிறார். தேவர்களின் பகல்பொழுதின் கடைசி நேரம், ஆனி மாதம். அந்த மாத உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் நடராஜருக்கு பூஜை செய்வதே ஆனித்திருமஞ்சனம் எனப்படுகிறது. மதுரையில் நடராஜர் கால்மாறி திருநடனம் புரிவதை பரஞ்ஜோதி முனிவர், திருவிளையாடற் புராணத்தில் 25ம் படலமாக விவரிக்கிறார். நமசிவாய எனும் ஐந்தெழுத்தைக் குறிக்கும் வகையில் நடராஜரின் கருவறை வாயிலில் ஐந்து படிகள் அமைந்துள்ளன. தேவர்களுக்காக 42, முருகனுக்காக 3, திருமாலுடன் 9, அம்பிகையுடன் 36, தானே ஆடியது 18 என மொத்தம் 108 சிவதாண்டவங்கள் புகழ் பெற்றவை. நெல்லை ஆழ்வார்குறிச்சி கோயிலில் உள்ள ஒரே கல்லினாலான நடராஜரின் சிலையை தட்டினால் வெண்கல ஓசை எழுகிறது. ஆனித்திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் தொடங்கி வைத்தவர் ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி மகரிஷி….

The post தில்லையம்பல நடராஜா appeared first on Dinakaran.

Tags : Natarajab Peruman ,Thiruvallam Chitrasaba ,Tirunelveli ,Thamirasaba ,Madurai ,Villithaba ,Sidambaram Kanakasaba ,Thiruvalangad ,Natarajar ,
× RELATED திருநெல்வேலி, தென்காசியில் தொழிலாளர்...