×

சிவராத்திரியில் சூரிய பூஜை

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருத்தலம் பாரியா மருதுபட்டி. இங்கு அமைந்துள்ள ஸ்ரீ மருந்தீஸ்வரர் திருக் கோயிலில் சிவராத்திரி விழா மிகச்சிறப்பாக நடைபெறும். மகா சிவராத்திரிக்கு மறுநாள் காலையில் சூரியன் உதித்தும், சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தின் மீது படரும் அற்புதக் காட்சியைக் காணலாம். இந்த சூரிய பூஜையைத் தரிசித்த பின்னர்தான் சிவராத்திரியில் கலந்து கொண்ட பக்தர்கள் இல்லத்திற்கும் செல்வர். இதேபோல் சோழிங்க நல்லூர் திருத்தலத்தில் அமைந்துள்ள சிவாலயத்தில் சிவபெருமான் ஸ்ரீ சங்கரநாராயணராக, கோமதி அம்மனுடன் அருள்புரிகிறார். இங்கு சிவராத்திரியின் நான்காவது ஜாம பூஜை, சூரிய உதயத்திற்குப்பின் நடைபெறும். ஏனெனில் அன்று மட்டும் சூரிய ஒளி காலை ஆறு மணி அளவில் மூலவர் மீது படுவது ஓர் அற்புதத் தரிசனம் என்று போற்றப்படுகிறது.- டி.ஆர். பரிமளரங்கன்…

The post சிவராத்திரியில் சூரிய பூஜை appeared first on Dinakaran.

Tags : Shivaratri ,Baria ,Maruthupatti ,Temple ,Sivagangai District ,Shivratri festival ,Sri Darshaneeswarar Thiruk Temple ,
× RELATED மங்கலங்களை வாரி வழங்கும் சிவராத்திரி