×

பங்குனி மாத விசேஷங்கள்

பங்குனி 1, மார்ச் 14, சனி : பஞ்சமி.  ஷடசீதி புண்ணிய காலம். காரடையான் நோன்பு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் திருமஞ்சன சேவை. காஞ்சி ஸ்ரீ கச்சபேஸ்வரர் தாயார்குளம் தெப்பல் உற்சவம். வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்யபீடத்தில் இன்று  கடன் பிரச்னை விலக – ருணஹர கணபதி ஹோமம்.பங்குனி 2, மார்ச் 15, ஞாயிறு : சஷ்டி. திஸ்ரோஷ்டகை. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி புன்னை மர கண்ணன் அலங்காரத்தில் பவனி. வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்யபீடத்தில் இன்று விஷ ஜந்து பயம் நீங்க, அகோர மந்திர ஹோமம்.பங்குனி 3, மார்ச் 16, திங்கள் : சப்தமி.  உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீனிவாசப் பெருமாள் காலை திருப்பல்லக்கு. திருவெள்ளறை ஸ்ரீ சுவேதாத்திரிநாதர் காலை சிம்ம வாகனத்திலும், இரவு சேஷ வாகனத்திலும் பவனி. தன்வந்த்ரி ஆரோக்யபீடம் – இன்று கணவன் மனைவி ஒற்றுமைக்கான தச பைரவர் யாகம்.பங்குனி 4, மார்ச் 17, செவ்வாய் : அஷ்டமி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். தன்வந்த்ரி ஆரோக்யபீடம் –  கிரஹ தோஷம் விலக – நவதுர்கா ஹோமம்.பங்குனி 5, மார்ச் 18, புதன் : நவமி. சுவாமி நெல்லையப்பர். காந்தியம்மன் இருவருக்கும் திருமஞ்சன சேவை. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி பஞ்சமுக ஹனுமார் வாகனத்தில்  ராமர் திருக்கோலமாய்க் காட்சியருளல். தன்வந்த்ரி ஆரோக்யபீடம் – அச்சம் போக்கும் 64 பைரவர் ஹோமம்.பங்குனி 6, மார்ச் 19, வியாழன் : தசமி. உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கு. வெண்ணெய்த்தாழி சேவை. திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் வண்டலூர் சப்பரத்திலும், இரவு தங்கக் குதிரை வானத்திலும் திருவீதியுலா. தன்வந்த்ரி ஆரோக்யபீடம் – நட்சத்திர தோஷம் விலக  அஸ்வினி நட்சத்திர சாந்தி ஹோமம்.பங்குனி 7, மார்ச் 20, வெள்ளி : ஏகாதசி. ஸர்வ ஏகாதசி. திருவெள்ளறை ஸ்ரீ சுவேதாத்திரிநாதர் ரதோற்சவம். திருவோண விரதம். தன்வந்த்ரி ஆரோக்யபீடத்தில் இன்று   தீராத நோய்கள் தீர – ஏகாதசி ஹோமம்.பங்குனி 8, மார்ச் 21, சனி : துவாதசி. சிவாலயங்களிலும் இன்று மாலை ஸ்ரீ நந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி டவுன் கரிய மாணிக்கப் பெருமாள் கோயிலில் உற்ஸவாரம்பம். சனி மஹா பிரதோஷம். திருவோண விரதம். தன்வந்த்ரி ஆரோக்யபீடம்- இன்று  நட்சத்திர தோஷம் விலக, கிருத்திகை நட்சத்திர சாந்தி ஹோமம்.பங்குனி 9, மார்ச் 22, ஞாயிறு : திரயோதசி. மாத சிவராத்திரி. தண்டியடிகள் நாயனார் குருபூஜை.  வலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி. தன்வந்த்ரி ஆரோக்யபீடம் – இன்று நட்சத்திர தோஷம் விலக, ரோகிணி நட்சத்திர சாந்தி ஹோமம்.பங்குனி 10, மார்ச் 23, திங்கள் : சதுர்த்தசி. உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீ னிவாசப்பெருமாள் விடாயாற்று. மாலை புஷ்ப யாகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. ஸர்வ அமாவாசை. தன்வந்த்ரி ஆரோக்யபீடம் – இன்று நட்சத்திர தோஷம் விலக, மிருகசீர்ஷ நட்சத்திர சாந்தி ஹோமம்.பங்குனி 11, மார்ச் 24, செவ்வாய் : அமாவாசை.  திருப்புவனம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி உற்சவாரம்பம். பட்டுக்கோட்டை நாடியம்மன் காப்பு காட்டுதல்.  தன்வந்த்ரி ஆரோக்யபீடம் –  திருஷ்டி தோஷங்கள் விலக – ப்ரத்யங்கிரா தேவி ஹோமம்.பங்குனி 12, மார்ச் 25, புதன் : பிரதமை. திருப்புவனம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருவீதியுலா.  தெலுங்கு வருஷப்பிறப்பு, உடையாளூர் அம்மன் உற்சவம். தன்வந்த்ரி ஆரோக்யபீடம் –  நட்சத்திர தோஷம் விலக – புனர்பூச நட்சத்திர சாந்தி ஹோமம்.பங்குனி 13, மார்ச் 26, வியாழன் : துவிதியை. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மதுரை ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் உற்ஸவாரம்பம். அன்ன வாகனத்தில் திருவீதியுலா. திருவேதிக்குடியில் பங்குனி மாதம் 13, 16 வரை உதயகாலத்திலும், 15 முதல் 20 வரையில் நந்திமங்கை என்கிற நெல்லிச்சேரியில் மாலை 5 மணிக்கும் சூரிய பூஜை. தன்வந்த்ரி ஆரோக்யபீடம் – நட்சத்திர தோஷம் விலக – பூச நட்சத்திர சாந்தி ஹோமம்.பங்குனி 14, மார்ச் 27, வெள்ளி : திரிதியை. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கல்யாணம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிரஹத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல். வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்யபீடம் – இன்று  நட்சத்திர தோஷம் விலக, ஆயில்யம் நட்சத்திர சாந்தி ஹோமம்.பங்குனி 15, மார்ச் 28, சனி : சதுர்த்தி. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் உற்ஸவாரம்பம்.  சதுர்த்தி விரதம். சக்தி கணபதி விரதம். கார்த்திகை விரதம்.  தன்வந்த்ரிஆரோக்யபீடம் –  நட்சத்திர தோஷம் விலக, மகம் நட்சத்திர சாந்தி ஹோமம்.பங்குனி 16, மார்ச் 29, ஞாயிறு : பஞ்சமி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் உற்ஸவாரம்பம். நேச நாயனார் குருபூஜை.  காஞ்சி ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் காலை சூரியப் பிரபையிலும், இரவு சந்திரப் பிரபையிலும் பவனி.  மன்னார்குடி வெண்ணைய்த்தாழி. தன்வந்த்ரி ஆரோக்யபீடம், நட்சத்திர தோஷம் விலக, பூரம் நட்சத்திர சாந்தி ஹோமம்.பங்குனி 17, மார்ச் 30, திங்கள்  : சஷ்டி. மதுரை ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ராமாவதாரம். இரவு ஹனுமந்த வாகனத்தில் புறப்பாடு. பரமக்குடி அன்னை முத்தாலம்மன் உற்சவாரம்பம். சஷ்டி விதம். மன்னார்குடி தேர்.  தன்வந்த்ரி ஆரோக்யபீடத்தில் – சத்ரு தோஷம் அகல, சத்ரு சம்ஹார சுப்ரமண்ய யாகம்.பங்குனி 18, மார்ச் 31,செவ்வாய் : சப்தமி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் அன்ன வாகனத்தில் புறப்பாடு. பழனி ஸ்ரீ ஆண்டவர் உற்சவாரம்பம். புதுச்சேரி சப்பரத்தில் பவனி. தொட்டியம் ஸ்ரீ காளியம்மன் ரதோத்ஸவம். தன்வந்த்ரிஆரோக்யபீடம் – நட்சத்திர தோஷம் விலக, ஹஸ்த நட்சத்திர சாந்தி ஹோமம்.பங்குனி 19, ஏப்ரல் 1, புதன்  : அஷ்டமி. காஞ்சி ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் ரிஷப வாகன  சேவை. திருவையாறு அந்தணர்புரத்தில் ஸ்ரீ நந்திகேஸ்வரர் ஜனனம், இரவு பட்டாபிஷேகம், செங்கோல் கொடுத்தல். தன்வந்த்ரி ஆரோக்யபீடம் – நட்சத்திர தோஷம் விலக, சித்திரை நட்சத்திர சாந்தி ஹோமம்.பங்குனி 20, ஏப்ரல் 2,வியாழன்  : நவமி. ஸ்ரீ ராம நவமி. தாயமங்கலம் ஸ்ரீ முத்து மாரியம்மன் அன்ன வாகனத்தில் பவனி வரும் காட்சி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் நக்கீரர் லீலை. இரவு வெள்ளி யானை வாகனத்தில் பவனி. திருவையாறு ஐயாறப்பர் வெட்டிவேர் சிவிகையிலும், நந்திகேஸ்வரர் குதிரை வாகனத்திலும் திருமழபாடிக்கு எழுந்தருளல், நந்திகேஸ்வரருக்கும் சுயசாம்பிகைக்கும் திருமழபாடியில் திருக்கல்யாணம். காஞ்சி காலை 63வர், இரவு வெள்ளிரதம், திருச்சேறை அருகிலுள்ள பருத்திசேரி ஸ்ரீ ராமநவமி, புள்ளங்பூதங்குடி ஸ்ரீ ராமநவமி உற்சவம். தன்வந்த்ரி ஆரோக்யபீடம் –  நட்சத்திர தோஷம் விலக, சுவாதி நட்சத்திர சாந்தி ஹோமம்.பங்குனி 21, ஏப்ரல் 3, வெள்ளி  : தசமி. பழனி ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு. காஞ்சி ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் ரதோற்ஸவம்.  பழனி ஸ்ரீ ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு. காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் தெப்பல் உற்சவம், நாச்சியார் கோயில் கல்கருட சேவை. தன்வந்த்ரிஆரோக்யபீடம் –  நட்சத்திர தோஷம் விலக, விசாகம் நட்சத்திர சாந்தி ஹோமம்.பங்குனி 22, ஏப்ரல் 4, சனி  : ஏகாதசி. தாயமங்கலம் ஸ்ரீ முத்து மாரியம்மன் பொங்கல் பெருவிழா. ஸர்வ ஏகாதசி. திருச்சுழி ஸ்ரீ சிவபெருமான் திருக்கல்யாணம்.  மயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர் திருத்தேர். தன்வந்த்ரிஆரோக்யபீடம் – சனி கிரக தோஷங்கள் விலக, சனி சாந்தி ஹோமம்.பங்குனி 23, ஏப்ரல் 5,ஞாயிறு : துவாதசி. பிரதோஷம். வாமனத்துவாதசி. பழனி ஸ்ரீ ஆண்டவர் திருக்கல்யாணம். குறுக்குத்துறை ஸ்ரீ ஆறுமுகநயினார் வருஷாபிஷேகம்.   திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் தெப்பம். தன்வந்த்ரிஆரோக்யபீடம் – நட்சத்திர தோஷம் விலக, கேட்டை நட்சத்திர சாந்தி ஹோமம்.பங்குனி 24, ஏப்ரல் 6, திங்கள் : மதனத்திரயோதசி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் திருக்கல்யாணம்.  பங்குனி உத்தரம்.  காஞ்சி காலை கம்பாநதியில் ருத்ரபாத தீர்த்தம், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் திருச்சோற்றுத்துறை ஸ்ரீ அன்னபூரணி அம்பிகா சமேத ஸ்ரீ ஓதனவனேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரம் தீர்த்தவாரி உற்சவவிழா.  தன்வந்த்ரி ஆரோக்யபீடம் – நட்சத்திர தோஷம் விலக, மூலம் நட்சத்திர சாந்தி ஹோமம். பங்குனி 25, ஏப்ரல் 7, செவ்வாய் : சதுர்த்தசி. தாயமங்கலம் ஸ்ரீ முத்து மாரிம்மன் புஷ்ப சப்பரத்தில் தீர்த்தவாரி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல். திருவஹிந்திரபுரம் ஸ்ரீ தேவநாதஸ்வாமி தாயார் சேர்த்தி, முத்தாட்சியம்மன் தீச்சட்டி, காரைக்குடியடுத்த பாலையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் பொங்கல் திருவிழா, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஸ்ரீ தியாகராஜர் திருக்கல்யாணம். தன்வந்த்ரிஆரோக்யபீடம் – தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற, சந்தான கோபால யாகம்.பங்குனி 26, ஏப்ரல் 8, புதன் : பௌர்ணமி. அருப்புக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் பூக்குழி விழா. காஞ்சி பஞ்சமூர்த்தி ரிஷப வாகன உற்சவம். தன்வந்த்ரிஆரோக்யபீடம் – நட்சத்திர தோஷம் விலக, உத்திராட நட்சத்திர சாந்தி ஹோமம்.பங்குனி 27, ஏப்ரல் 9, வியாழன் : பிரதமை. திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் ரதோற்ஸவம். காரைக்கால் அம்மையார் குருபூஜை. சைத்ர பஹூள பிரதமை. தன்வந்த்ரிஆரோக்யபீடம் – ருண, ரோக, சத்ரு உபாதைகள் அகலஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஹோமம்.பங்குனி 28, ஏப்ரல் 10, வெள்ளி : திரிதியை. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளிவாகன சேவை.  சுவாமிமலை, திருச்சி நாகநாதர், வள்ளி திருக்கல்யாணம், கலசாபிஷேகம் உற்சவ சாந்சி, சேலையூர் ஸ்ரீ கந்தராஸ்ரமம் ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் ஜயந்தி.  தன்வந்த்ரி ஆரோக்யபீடம் – நட்சத்திர தோஷம் விலக, அவிட்டம் நட்சத்திர சாந்தி ஹோமம்.பங்குனி 29, ஏப்ரல் 11, சனி : சதுர்த்தி. சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் சேஷ வாகனத்தில் திருவீதியுலா. குச்சனூர் ஸ்ரீ சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. தன்வந்த்ரி ஆரோக்யபீடம் – நட்சத்திர தோஷம் விலக – சதயம் நட்சத்திர சாந்தி ஹோமம்.பங்குனி 30, ஏப்ரல் 12, ஞாயிறு : பஞ்சமி. சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் மரக்குதிரையில் புறப்பாடு கண்டருளல். தன்வந்த்ரி ஆரோக்யபீடத்தில் இன்று  நட்சத்திர தோஷம் விலக – பூரட்டாதி நட்சத்திர சாந்தி ஹோமம்.பங்குனி 31 ஏப்ரல் 13 திங்கள் : சஷ்டி. கீழ்த்திருப்பதிஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் ஸ்ரீ கெருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ சிவசைலநாதர் ரதம். தன்வந்த்ரிஆரோக்யபீடத்தில் நக்ஷத்திர தோஷம் விலக, உத்திரட்டாதி நட்சத்திர சாந்தி ஹோமம்….

The post பங்குனி மாத விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Bankuni Monthly Special ,Bankuni Monthly ,
× RELATED காங்கிரஸ் எம்.பி.க்கள் எண்ணிக்கை 100-ஆக அதிகரிப்பு