×

இந்தியாவில் 4.13 லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளனர்; அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 81,224 பேர் : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!!

டெல்லி : இந்தியாவில் 4 லட்சத்துக்கும் அதிகமாக பிச்சைக்காரர்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்தியாவில் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டு இருந்த கேள்விக்கு மத்திய சமூக நீதித்துறை தவார் சந்த் கெலாட் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார். அந்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நம் நாட்டில் 4.13,670 பிச்சைக்காரர்கள் உள்ளனர்.மொத்த பிச்சைக்காரர்களில் 2,21,673 லட்சம் பேர் ஆண்கள், 1,91,997 லட்சம் பேர் பெண்கள். நம் நாட்டில் மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக  81,224 பிச்சைகாரர்கள் உள்ளனர். அடுத்தபடியாக  உத்தர பிரதேசம் (65,835), ஆந்திர பிரதேசம் (30,218), பீகார் (29,723), மத்திய பிரதேசம் (28,695), ராஜஸ்தான் (25,853) மற்றும் டெல்லி (2,187) ஆகிய மாநிலங்களிலும் பிச்சைக்காரர்கள் கணிசமான அளவில் உள்ளனர்.சண்டிகரில் 121 பிச்சைக்காரர்கள் உள்ளனர். நாட்டில் மிகவும் குறைவாக லட்சத்தீவில் 2 பிச்சைக்காரர்கள் உள்ளனர். அதேவேளையில், தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டியு மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் முறையே 19,22 மற்றும் 56 பிச்சைக்காரர்கள் உள்ளனர். இந்த தகவல்கள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் பல ஆண்டுகளுக்கு முந்தையது என்பது குறிப்பிடத்தக்கது….

The post இந்தியாவில் 4.13 லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளனர்; அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 81,224 பேர் : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!! appeared first on Dinakaran.

Tags : India ,West Bengal ,Government ,Delhi ,Central Government ,Parliament ,
× RELATED சந்தேஷ்காலி விவகாரம் சிபிஐ...