×

சீர்காழி அருகே பல மாதங்களாக அரசின் நிவாரணம் கிடைக்காததால் விரக்தி: விவசாயி உயிரிழப்பு

சீர்காழி: தமிழக அரசு நிவாரணம் அறிவித்து பல மாதங்கள் ஆகியும் கிடைக்காத விரக்தியில் விவசாயி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நிவர், புரவி மற்றும் பருவம் தவறி பெய்த மழையால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதில் கொடகாரமுறை கிராமத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தியின் 4 ஏக்கர் நெற்பயிரும் முற்றிலும் பாதிப்புக்குள்ளானது.இதனால் அரசின் நிவாரண தொகை கிடைக்கும் என காத்திருந்த விவசாயி கிருஷ்ணமூர்த்திக்கு சிறு தொகை மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் வட்டிக்கு கடன் வாங்கி உழவு செய்திருந்த கிருஷ்ணமூர்த்தி வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் தவிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார். இதனால் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார்.அரசின் நிவாரணம் கிடைக்காத வகையில் அலட்சியமாக செயல்பட்டு விவசாயி உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. விவசாயி உயிரிழப்பால் குடும்பத்தினர் மட்டுமின்றி கொடகாரமுறை கிராம மக்களும் வேதனை அடைந்துள்ளார்கள்….

The post சீர்காழி அருகே பல மாதங்களாக அரசின் நிவாரணம் கிடைக்காததால் விரக்தி: விவசாயி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Seirkasha ,Seergarhu ,Tamil Nadu government ,Sewer ,
× RELATED பாதாள சாக்கடைகளில் மனிதர்கள்...