×

ஆழ்வார்திருநகரி அருகே ஆற்றங்கரை பகுதியில் மலைப்பாம்பு பிடிபட்டது

உடன்குடி :  ஆழ்வார்திருகரி அருகே பால்குளம் தாமிரபரணி  ஆற்றங்கரைப் பகுதியில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்த வனத்துறையினர் குதிரைமொழி தேரிக்காட்டுப் பகுதியில் விட்டனர். ஆழ்வார்திருநகரி  அருகே பால்குளம் தாமிரபரணி ஆற்றுக்கரையோரப் பகுதியில் மலைப்பாம்பு   சுற்றித்திரிவதாக திருச்செந்தூர் வனத்துறையினருக்கு தகவல்  கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் சென்பகப்ரியா உத்தரவின்  பேரில் திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் ரவீந்திரன் தலைமையில் வனவர்  சுப்புராஜ், வனக்காப்பாளர்கள் முத்துகிருஷ்ணன், ரத்தினம், பொதிகை இயற்கை  சங்க உறுப்பினர் ஓபேத் உள்ளிட்டோர் விரைந்துசென்று 12 அடி நீள மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்தனர். பின்னர் குதிரைமொழி  தேரிக்காட்டு பகுதியில் விட்டனர்.இதேபோல் கடந்த சில நாட்களுக்கு  முன்னர் ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆறு கரையோர பகுதியில் சுமார் 8 அடி  நீளமுள்ள மலைபாம்பையும் வனத்துறையினர் பிடித்து குரைமொழி தேரிக்காட்டு  பகுதியில் விட்டனர் என்பது குறிப்பிடதக்கது….

The post ஆழ்வார்திருநகரி அருகே ஆற்றங்கரை பகுதியில் மலைப்பாம்பு பிடிபட்டது appeared first on Dinakaran.

Tags : Alwarthirunagari ,Ubengudi ,Balkulam Thamirapharani ,Alwarthirugari ,Dinakaran ,
× RELATED சாத்தான்குளம் அருகே அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்