×

ஆண்டிபட்டியில் மாசி பச்சை திருவிழாவால் கடும் போக்குவரத்து நெரிசல்-வாகன ஓட்டிகள் பரிதவிப்பு

ஆண்டிபட்டி : மாசி பச்சை திருவிழாவை முன்னிட்டு ஆண்டிபட்டி நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர். தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மாசி மாதத்தில் மகாசிவராத்தியை மாசி பச்சை விழாவாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக தென்மாவட்டங்களாக மதுரை, தேனி பகுதிகளில் மாசிப்பச்சை விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.இவர்களுக்கான குலதெய்வ கோயில்கள் அனைத்தும் உசிலம்பட்டி, கருமாத்தூர், செக்கனூரணி, மதுரை, ராஜபாளையம், விருதுநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ளது.  இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மாசிப்பச்சை கோயில் திருவிழா மகா சிவராத்திரியான  நடைபெற்றது. இதனையடுத்து மக்கள் தங்களின் குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்றனர். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து கோயிலுக்கு செல்லும் வகையில் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு பிடித்தும், சொந்த வாகனத்திலும் கோயிலுக்கு சென்றனர். மாசிப்பச்சை விழாவை முன்னிட்டு நேற்று காலை முதல் அனைத்து பஸ்களிலும் வழக்கத்தை விட மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்ததால் ஆண்டிபட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. ஏற்கனவே குறுகிய சாலையை கொண்டுள்ள ஆண்டிபட்டி நகரில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.நேற்று காலை முதல் இரவு வரையில் வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டே இருந்தது. ஆண்டிப்பட்டி நகரில் பணிபுரியும் போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர். குறிப்பாக வைகை அணை சாலைப்பிரிவு, பழைய மகளிர் போலீஸ் நிலைய பகுதியில் உள்ள குறுகிய வளைவுகளில் வாகன நெரிசல் அதிகமாக காணப்பட்டது. மேலும் ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் இருந்து கொண்டமநாயக்கன்பட்டி வரை நகர் பகுதியை கடப்பதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியது. இதனால் வாகனங்களில் பயணம் செய்த பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.பஸ்கள் கிடைக்காமல் பெரும் சிரமம்மாசிமகாசிவராத்திரியையொட்டி தேனியில் பிற பகுதிகளுக்கு செல்லவும், பிற பகுதிகளில் இருந்து தேனி வந்து குலதெய்வங்கள காண செல்வும் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலும் தேனியில் இருந்து விருதுநகர், நெலலை மாவட்டங்களுக்கும், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேனிக்கு நேற்று வந்து சென்றனர். இதன் காரணமாக தேனி பஸ்நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் அரசு போக்குவரத்து நிர்வாகம், பயணிகள் இருப்பிற்கேற்ப கூட்டம் அதிகமிருக்கும் வழித்தடங்களுக்கு பஸ்களை இயக்கினர். மிகக்குறைவாக பஸ்கள் இயக்கப்பட்டதாலும், ஏற்கனவே, இருக்கிற வழித்தட பஸ்களை சிறப்பு பயணமாக அனுப்பி விட்டதால் வழக்கம்போல செல்ல வேண்டிய பஸ்களின் அளவு குறைந்ததால் பயணிகள் பஸ்கள் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்….

The post ஆண்டிபட்டியில் மாசி பச்சை திருவிழாவால் கடும் போக்குவரத்து நெரிசல்-வாகன ஓட்டிகள் பரிதவிப்பு appeared first on Dinakaran.

Tags : Massi Pacha festival ,Andipatti ,Andipatti Nagar ,Masi Pacha festival ,Dinakaran ,
× RELATED பேரூராட்சி அலுவலகம் முற்றுகை