×

கார சோள பணியாரம்

செய்முறைஅரிசி, வெள்ளைச் சோளம், உளுந்து ஆகியவற்றை நன்கு கழுவி 3 மணிநேரம் ஊற வைக்கவும். அவலை தனியாக ஊறவைத்து, இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து 6 முதல் 8 மணி நேரம் கழித்து பணியாரம் செய்ய எடுத்துக் கொள்ளலாம். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, கருவேப்பிலை, உளுந்து, கடலைபருப்பு தாளித்து, பின்னர் நறுக்கி வைத்துள்ள பச்சைமிளகாய், வெங்காயம், கேரட் சேர்த்து 2 நிமிடம் வரை வதக்கி அதை மாவில் சேர்க்கவும். மேலும் மல்லித்தழை, தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து உப்பு தேவைக்கேற்ப சேர்த்து குழிப்பணியாரக்கல்லில் எண்ணெய் ஊற்றி பணியாரம் செய்யலாம். இதில் தேங்காய்த்துருவல் சேர்ப்பதால் பணியாரம் சூடு குறைந்தாலும் சாஃப்டாகவே இருக்கும். அப்படியேவும் சாப்பிடலாம். தேவையெனில், தேங்காய் சட்னியுடன் சேர்த்தும் சாப்பிடலாம். சுவையான கார சோள பணியாரம் ரெடி.

The post கார சோள பணியாரம் appeared first on Dinakaran.

Tags : Kara Sola Paniyaram ,
× RELATED இந்தியாவிலே முதல்முறையாக தமிழகத்தில்...