×

ரசகுல்லா

செய்முறைபால் நன்றாகப் பொங்கி வரும்போது, Whey water விடவும். பால் திரிந்தவுடன், ஒரு மெல்லிய துணியில் கட்டித் தொங்க விடவும். தண்ணீர் வடிந்தவுடன் பனீரை ஒரு தாம்பாளத்தில் போட்டு, நன்றாக உள்ளங்கையால் அழுத்திப் பிசையவும். பின் ஒரு ஈரத்துணியால் மூடி விடவும். இதற்குள் சர்க்கரையையும், தண்ணீரையும் சேர்த்துக் கலந்து கொதிக்கவிடவும். பிசைந்து வைத்துள்ள பனீரை எடுத்து சிறுசிறு உருண்டைகளாக்கி, இந்த சர்க்கரைப்பாகில் போட்டு மூடி வைத்து கொதிக்க விடவும். ரசகுல்லாக்கள் உப்பி, இருமடங்கு பெரிதாக ஆனவுடன், எடுத்து ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீருக்குள் போட்டு வைக்கவும். இதற்குள் அடுப்பில் கொதிக்கும் சர்க்கரைப்பாகை, நன்கு கொதிக்க வைத்து பிசுபிசுப்பு பதம் வந்ததும், அதில் ரசகுல்லாக்களை போட்டு ஊற வைத்து சில மணி நேரம் கழித்துப் பரிமாறவும். Whey water தயாரிக்க பாலை தயிர், எலுமிச்சம் சாறு கொண்டு திரித்து, வடிகட்டி, பனீரை வீட்டு உபயோகத்திற்கு வைத்துக்கொண்டு, வடிகட்டிய நீரை பத்திரப்படுத்தி வைக்கவும். இதுவே Whey water.

The post ரசகுல்லா appeared first on Dinakaran.

Tags :
× RELATED தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவில்...