×

லெமன் இடியாப்பம்

செய்முறை :கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை மளமளவென கொதிக்க வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இடியாப்ப மாவில் உப்பு சேர்த்து கலந்து கொதிக்கும் தண்ணீரை ஊற்றி மத்தினால் கிளறி மாவை பிசைந்து கொள்ளவும். மாவை அச்சில் போட்டு இடியாப்பம் பிழிந்தெடுத்து, ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை நிறுத்தி இறக்கவும். இப்பொழுது எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக கிளறி, ஆறியதும் இடியாப்பத்தில் கொட்டி கலந்து உதிரியாக பிசறி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

The post லெமன் இடியாப்பம் appeared first on Dinakaran.

Tags : Idiyapa ,
× RELATED நாகர்கோவில் மாநகராட்சியில் இடியாப்ப...