×

ஜெல்லி ஜவ்வரிசி சர்பத்

செய்முறை:இன்ஸ்டண்ட் ஆக்கரக்கா, தண்ணீர் 1 லிட்டர், சீனி 150 கிராம், உப்பு 1 தே.கரண்டி, பச்சை நிறம்- 1 தேக்கரண்டி இவை அனைத்தையும் ஒன்றாக காய்ச்சி உறைய விடவும். உறைந்த பின் ஆக்கரக்காவை துருவிக்கொள்ளவும். ஜவ்வரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் 1 தே.கரண்டி உப்பு, ஜவ்வரிசி போட்டு வேகவிடவும். (ஜவ்வரிசி நிறம் மாறிவிட்டால் வெந்துவிட்டதை அறியலாம்). வெந்ததும் அதை தண்ணீரில் கழுவி வடிகட்டியால் வடித்துக்கொள்ளவும். சீனி-250 கிராம்,தண்ணீர்- 1/2 லிட்டர், பாண்டான்இலை 4, உப்பு 1 தே.கரண்டி இவை அனைத்தையும் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.(சீனி பாகு) ஒரு பாத்திரத்தில் துருவிய ஆக்கரக்கா,பால்,ஜவ்வரிசி, தண்ணீர், தேவையான அளவு சீனி பாகு இவற்றை எல்லாம் ஒன்றாக கலந்து குளிர் பதனப்பெட்டியில் வைத்து சில்லென்று பரிமாறவும்.

The post ஜெல்லி ஜவ்வரிசி சர்பத் appeared first on Dinakaran.

Tags : Jelly Jowarisi Sarpath ,
× RELATED சொல்லிட்டாங்க…