×

மட்டன் கீமா சமோசா

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி, 1 ½ டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், சிறிது மிளகாய் தூள், ½ டீஸ்பூன் கொத்தமல்லி தூள், உப்பு ½ டீஸ்பூன், கரம்மசாலா 1/4 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மிளகாய் 2 டீஸ்பூன் சேர்த்து அனைத்தையும் பொருட்களையும் நன்றாக வதக்க வேண்டும்.. பின்பு 250 கிராம் மட்டன் கீமா சேர்த்து. 4-5 நிமிடம் மீடியம் தீயில் வைத்து வேகவிடவும். அனைத்து பொருட்களையும் நன்றாக வதங்கிய பின் 3-4 நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்க வேண்டும். பின்பு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்கு வதக்க வேண்டும்.அடுப்பை அணைத்து விட்டு இந்த மசாலா கலவையை நன்கு ஆற விட வேண்டும். அடுத்து சமோசா பட்டியை எடுத்து கோன் வடிவில் சுருட்டி அதில் மசாலா கலவையை நிரப்பி மூடி விட வேண்டும். பின்பு எண்ணெயைக் காயவைத்து சமோசா பொன்நிறமாகும் வரை நன்கு வறுத்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான மொறுமொறுப்பான மட்டன் கீமா சமோசா தயார். இதனை உங்களுக்கு விருப்பமான சாஸ் அல்லது கொத்தமல்லி சட்னி சேர்த்து சாப்பிட்டலாம்.

The post மட்டன் கீமா சமோசா appeared first on Dinakaran.

Tags :
× RELATED சொல்லிட்டாங்க…