×

ரச மலாய்

செய்முறைபாலைக்காய்ச்சி, பொங்கி வரும்போது வே வாட்டர் விட்டு பாலைத்திரிக்க விடவும். இவ்வாறு திரிந்த பாலை ஒரு துணியில் வடிகட்டி மூட்டையாகக்கட்டித் தொங்க விடவும். கையால் பிழியக்கூடாது. தண்ணீர் வடிந்ததும், தாம்பாளத்தில் கொட்டி, நன்றாக அழுத்திப் பிசைந்தபின் ஒரு ஈரத்துணி கொண்டு மூடவும். இதற்குள் சர்க்கரை பாகு ரெடி செய்யவும். சர்க்கரை நன்றாகக் கரைந்தபின் அடுப்பின் மேல் வைத்து நன்றாக கொதி வந்தவுடன் அழுக்கெடுத்து தயாரித்து ரெடியாக ஷேப் செய்து வைத்திருக்கும் ரச மலாய்களை சர்க்கரைப் பாகில் போட்டு, நன்றாக கொதிக்க விடவும். பாலை சுண்டக் காய்ச்சி; சர்க்கரை, குங்குமப்பூ சேர்க்கவும். ரசமலாய்கள் உப்பி, இருமடங்காகி; மேல் மிதந்து வரும் நேரத்தில் எடுத்து காய்ச்சிய பாலில் ஊற வைத்து, சில மணி நேரம் கழித்துப் பரிமாறவும்.

The post ரச மலாய் appeared first on Dinakaran.

Tags :
× RELATED மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின்...