×

பிரபாஸ் படப்பிடிப்பில் வேன் மோதி ஊழியர் பலி

 

ஐதராபாத்: பிரபாஸ், இமான்வி நடிக்கும் ‘பவுஜி’ என்ற பான் இந்தியா படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை, தாங்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு ஒரு வேனில் படக்குழுவினர் புறப்பட்டனர். ஐதராபாத்துக்கு வெளியிலுள்ள அப்துல்லாபூர்மெட் அருகே சென்றபோது, தூப்ரன்பேட் பாலம் பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், அங்கிருந்த சிமெண்ட் தடுப்பு கட்டைகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோரவிபத்தில் சிக்கிய படக்குழு ஊழியர் ஒருவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த 5 ஊழியர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சவுட்டுப்பல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்தபோது வேன் அதிவேகத்தில் இயக்கப்பட்டதா அல்லது வாகனத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதா அல்லது டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்தாரா என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதையடுத்து, ‘பவுஜி’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

Tags : Prabhas ,Hyderabad ,Imanvi ,Pan India ,Ramoji Rao Film City ,Abdullapurmet ,Dhooprabanpet bridge ,
× RELATED சைக்கிள் கேப்பில் நடக்கும் திருப்பம்