- பாக்யா போர்ஸ்
- சியோன்
- சென்னை
- பாக்யா போர்ஸ்
- கமல்ஹாசன்
- ராஜ்கமல் பிலிம்ஸ்
- ஆர். மகேந்திரன்
- மஞ்சள் மீடியா
- சிவகார்த்திகேயன்
- சிவகுமார் முருகேசன்
- மதுரை
சென்னை: பாக்ய போர்ஸின் பிறந்த நாளான நேற்று, அவர் ஹீரோயினாக நடிப்பதை ‘சேயோன்’ படக்குழு உறுதி செய்தது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ், ஆர்.மகேந்திரனின் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பாக்ய போர்ஸ் நடிக்கிறார்.
‘தாய் கிழவி’ வெற்றிக்கு பிறகு இந்த படத்தை சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். கிராமத்து பின்னணியில் நடக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்க உள்ளது. இதற்காக பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஆயுதபூஜையில் இந்த படம் திரைக்கு வரலாம் எனக் கூறப்படுகிறது.
