×

கர்ப்பிணிகளுக்கு ஏன் ஃபோலிக் ஆசிட்?

தற்போது திருமணங்களில் பொக்கே, மொய் போன்ற கிஃப்ட்களுக்கு இடையே ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் தருவதும் படித்த சமூகங்களில் ட்ரெண்ட் ஆகிவருகிறது. அது என்ன ஃபோலிக் ஆசிட் மாத்திரை. கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களுக்கு ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் அவசியம். ;கர்ப்பத்துக்குத் திட்டமிடும் பெண்கள் மகப்பேறு மருத்துவரை அணுகி, ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளையும் இரும்புச்சத்து மாத்திரைகளையும் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம் என்று தற்போது மருத்துவர்களே வலியுறுத்துகிறார்கள். இன்று பல பெண்களுக்கு வைட்டமின்; பி குறைவாக உள்ளது. இதனால், உடல் பலவீனம், ரத்தசோகை ஏற்படுவதோடு, மகப்பேறு பிரச்னைகளும் உருவாகின்றன.குறிப்பாக, கரு உண்டாவதில் பிரச்னை, கரு தங்கலில் பிரச்னை, குழந்தை வளர்ச்சியின்மை, குறைபாடுடைய குழந்தை பிறப்பு போன்ற சிக்கல்களைப் பல பெண்கள் எதிர்கொள்கிறார்கள். இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கவே, மருத்துவர்கள் வைட்டமின்; பி9 நிறைந்த ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை கருவுற்ற பெண்களுக்கும், கருவுறப்போகும் பெண்களுக்கும் பரிந்துரைக்கிறார்கள். பொதுவாக, ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை கர்ப்ப காலத்தில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், திருமணம் நிச்சயமான உடனேயே ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. திருமணம் ஆன உடன் குழந்தை பேறும் இல்லை என்றால், குழந்தைப்பேறுக்குத் திட்டமிடத் தொடங்கும்போது எடுத்துக்கொள்ளத் தொடங்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

The post கர்ப்பிணிகளுக்கு ஏன் ஃபோலிக் ஆசிட்? appeared first on Dinakaran.

Tags : Boke ,Moi ,
× RELATED திருச்செந்தூர் கோயிலில் வள்ளி...