×

கொரோனா கால பருவமழை இணை நோய் ஆபத்தை தவிர்ப்பது எப்படி?

நமது தண்ணீர் தேவையை தீர்க்கும் பருவமழை கூடவே வெப்பமண்டல, மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்களையும் கொண்டு வருகிறது. ஏற்கனவே கோவிட் தொற்றுடன் இந்தியா போராடி வரும் நிலையில் மழைக்காலங்களின் தொடக்கமானது மக்களை பாதிக்கக்கூடிய கூடுதல் ஆபத்தை ஏற்படுத்துகிறது. மலேரியா, டெங்கு மற்றும் கொரோனா வைரஸ் ஆகியவற்றின் அறிகுறிகள்; ஒன்றோடொன்று சேர்ந்து வரும்பட்சத்தில் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல் மிகவும் சிரமமாகவும், கடினமாகவும் ஆகிறது. சரியான நேரத்தில் உரிய மருந்து கொடுப்பது மட்டுமே கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்குரிய ஒரே வழியாகும். இணை தொற்று; இந்த செயல்முறையை பாதிக்கக்கூடும். எனவே இணை தொற்றை; தடுப்பது சிறந்தது. இது சிக்கல்களுக்கு அல்லது உயிரிழப்புக்கு வழிவகுக்கக் கூடிய தவறான சிகிச்சையை தவிர்ப்பதற்கு உதவும். மலேரியா, டெங்கு மற்றும் கோவிட்-19 ஆகியவற்றின் அறிகுறிகள் டெங்கு காய்ச்சல், மலேரியா மற்றும் கோவிட்-19 ஆகியவற்றின் பண்புகள் ஏறக்குறைய ஒரே போன்றதாகும்.உடலில் அதிக காய்ச்சலை தூண்டக்கூடிய ஒரு வைரஸ் தொற்று நோயாக டெங்கு உள்ளது. எலும்பு முறிவு ஏற்படுத்தும் காய்ச்சல் என்றும் சொல்லப்படும் டெங்கு கடுமையான தலைவலி மற்றும் உடல்வலியை விளைவிக்கிறது. குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை டெங்கு காய்ச்சலின் பிற பொதுவான அறிகுறிகளாகும்.இதேபோல் குளிர், நடுக்கம், காய்ச்சல் மற்றும் வாந்தி ஆகியவை மலேரியாவின் பொது அறிகுறிகளில் முக்கியமானதாகும். பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியை சுமந்து செல்லும் தொற்று பாதிக்கப்பட்ட அனோஃபெல்ஸ் கொசுவால் விளைவிக்கப்படும் மலேரியாவிற்கு உடனடி சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் அது ஒரு உயிராபத்தை ஏற்படுத்தும் நோயாக மாறக்கூடும். கொரோனா என்கிற SARS CoV-2 வைரஸின் அறிகுறிகள் ஒவ்வொரு நபரிடமும் வித்தியாசமாக உருவாகியுள்ளன. தும்மல் அல்லது இருமலில் இருந்து பாதிக்கப்பட்ட நபரின் காற்று துளிகளால் பெரும்பாலும் கொரோனா பரவுகிறது. மிகவும் பொதுவான அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி,; உடல்வலி மற்றும் வறண்ட இருமல் உள்ளது. மேற்சொன்ன பொது அறிகுறிகள் தவிர சோர்வு, தொண்டை புண், வயிற்றுப்போக்கு மற்றும் சுவாசிப்பதில் ஏற்படும் சிரமம் அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளும் கொரோனா தொற்றில் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. இணை-தொற்றுகள் வராமல் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது நிலவி வரும் கொரோனா பெருந்தொற்று சுமையின் கீழ் இணை தொற்றுகள் பரவாமல் தடுப்பது அதிக முன்னுரிமைக்குரிய விஷயமாக உள்ளது. காய்ச்சல், உடல்வலி மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் இந்த மூன்று தொற்றுகளிலும் பொதுவானவையாக இருப்பதால்,; உடன் நிகழும் தொற்றுகள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுப்பது முக்கியமாகும்.; நடப்பு சூழலைக் கருத்தில் கொண்டு மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் பெருமளவு பரவாமல் தடுப்பதற்கு ஒரு பயனளிக்கக்கூடிய செயல்திட்டத்தை உருவாக்குவதே சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கான சவாலாக இருக்கிறது. ;இதற்கிடையே, கோவிட்-19 தொற்றுக்கான பரிசோதனைகளை அதிகரிப்பதும் இவ்விஷயத்தில் செய்வதற்கான சரியான வழிமுறையாக இருக்கக்கூடும். அதிவிரைவு பரிசோதனை வழியாக இத்தொற்றை மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலிலிருந்து வேறுபடுத்தி அடையாளம் காண இயலும். ;நாம் என்ன செய்ய வேண்டும்? சரியாக சிகிச்சையளிக்கப்படாவிடில் மலேரியா, டெங்கு மற்றும் கோவிட் – 19 ஆகியவை உயிருக்கு அச்சுறுத்தல் அளிக்கக்கூடியதாக மாறிவிடக்கூடும்.; எனவே முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை கழுவுவது, கிருமிநாசினியைப் பயன்படுத்துவது போன்ற கோவிட் தொற்று தடுப்பிற்கான வழிமுறைகள் மற்றும் விதிகளை நீங்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கு முகக்கவசம் அணிவதோடு நிறுத்திக்கொள்ளாமல், வீடு மற்றும் அலுவலகங்களில், சுத்தமான / புதிய / மழை நீர் தேங்காமல் தவிர்க்க வேண்டும். அத்துடன், கொசுக்கடியிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்குரிய, உடலை மறைக்கிற ஆடைகளை அணியவேண்டும். அவசியமில்லாமல் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.; உங்களது இல்லங்களுக்குள் கொசுக்கள் நுழையாதவாறு கதவு, ஜன்னல் போன்ற திறப்பு வழிகள் கொசுவலை கொண்டு மூடப்பட்டிருப்பதையும் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். கோவிட்டிலிருந்து பாதுகாப்புக்கான வழிகாட்டல் நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.

The post கொரோனா கால பருவமழை இணை நோய் ஆபத்தை தவிர்ப்பது எப்படி? appeared first on Dinakaran.

Tags : Corona monsoon ,
× RELATED தாய்ப்பால்… நம்பிக்கைகளும் நிதர்சனமும்!