×

என்னை ஏமாற்றி நடிக்க வைத்தார்கள்: மிருணாள் தாக்கூர் புகார்

மும்பை: மிருணாள் தாக்கூர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டெகாயிட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மிருணாள் தாக்கூர் அதிகமாக பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளிவந்த சன் ஆப் சர்தார் 2 திரைப்படத்தில் மிருணாள் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் கணவனை விட்டு பிரிந்து வாழும் மனைவியாக மிருணாள் தாக்கூருக்கும், மனைவியிடம் இருந்து பிரிந்து வாழும் நபராக அஜய் தேவ்கனுக்கும் இடையே ஏற்படும் நெருக்கம், நட்பு குறித்துதான் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது. இதில் நடிகை மிருணாள் தாக்கூரின் முன்னாள் கணவராக பாலிவுட் மூத்த நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார்.

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சன் ஆப் சர்தார் 2 திரைப்படத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து மிருணாள் தாக்கூர் பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘அந்த படத்தில் எனக்கு கணவராக சீனியர் ஒருவரைத்தான் ( சங்கி பாண்டே – வயது 63) தேர்வு செய்திருந்தார்கள். ஆனால், எனக்கும் அவருக்கும் கிட்டதட்ட 30 வயது வித்தியாசம். இது பற்றிய தகவல் எதையும் எனக்கு படக்குழுவினர் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. ஆனாலும் நான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட காரணத்தினால் எந்த வித இடைஞ்சலும் செய்யாமல் அந்த படத்தில் நடித்தேன். இதுபோல் ஏமாற்றுபவர்களும் திரைத்துறையில் இருக்கிறார்கள்’’ என்றார்.

Tags : Mrunal Thakur ,Mumbai ,Bollywood ,Mrunal ,Ajay Devgn ,
× RELATED கவர்ச்சி காட்சிகளை நீக்க கியாரா வற்புறுத்தல்