×

தேன், லவங்கப்பட்டையின் அற்புத மருத்துவ குணங்கள்

நன்றி குங்குமம் தோழி மனிதன் ஆரோக்கியமாக வாழ வேண்டுமெனில் தினமும் தேன் சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதயநோய் வராமல் விரட்டி அடிக்கும் அற்புத சக்தி தேனிற்கு உள்ளது. இதனுடன் லவங்கப்பட்டையும் சேர்த்து எடுத்துக் கொண்டால், பல்வேறு அற்புதங்கள் உண்டாகும். அது பற்றி தெரிந்து கொள்வோம்.* தினமும் 2 டீஸ்பூன் தேனுடன் 1 டீஸ்பூன் லவங்கப் பவுடர் சேர்த்துச் சாப்பிட்டு வர அல்சர் நோய் குணமாகும்.* தேனுடன், லவங்கப்பொடியை சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை தீரும்.* 2 டீஸ்பூன் லவங்கப்பொடியுடன், 1 டீஸ்பூன் தேனை மிதமான சுடுநீரில் கலந்து குடித்துவர சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.* தேனுடன், லவங்கப்பொடியைச் சேர்த்துத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.*வயதானவர்கள் தினமும் காலையில் ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் தேனுடன், லவங்கப்பொடியை நன்கு தூவி சாப்பிட இழந்த சக்தியை மீண்டும் பெற முடியும்.*தினமும் காலையில் தேனையும், லவங்கப்பொடியையும் கலந்து சுடுநீரில் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போய்விடும்.*தேனையும், லவங்கப்பொடியையும் சம அளவில் கலந்து இருவேளைகளிலும் சாப்பிட்டு வர காது மந்தம் குணமாகிவிடும்.*உணவு உண்பதற்கு முன்பாக உணவில் 2 டீஸ்பூன் தேனுடன், சிறிது லவங்கப்பொடியை தூவிச் சாப்பிட அஜீரணம் குணமாகும்.* என்றும் இளமையுடன் இருக்க மிதமான சுடுநீரில் 4 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் லவங்கப்பட்டைப் பொடியைக் கலந்து பருகி வர இளமை நிரந்தரமாகும்.* தினமும் மூன்று வேளையும் 2 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் லவங்கப்பொடியை வெதுவெதுப்பான வெந்நீரில் கலந்து குடித்துவர உடலில் உள்ள கொலஸ்ட்ரால்கள் கரைந்துபோகும்.* தேன், லவங்கப்பொடி இரண்டையும் சமஅளவில் எடுத்துக்கொண்டு ஒன்றாகக் கலந்து, சருமத்தில் ஏற்படும் நோய்களான சொறி, படைகள் மீது பூசி வர குணமாகும்.* தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு மிதமான சுடுநீரில் தேனையும், லவங்கப்பொடியையும் சேர்த்துக் குடித்து வந்தால் உடலின் எடை குறையும்.* 1 டீஸ்பூன் தேனுடன் 1 டீஸ்பூன் லவங்கப்பட்டை சேர்த்து தினமும் 3 வேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோயால் ஏற்பட்ட பாதிப்பின் வீரியம் குறையும். *சுடுநீரில் 1 டீஸ்பூன் தேனை ஊற்றி இளஞ்சூடாக்கி, அதனுடன் சிறிதளவு லவங்கப்பொடியைச் சேர்த்துச் சாப்பிட சைனஸ், சளி, இருமல் போன்ற பிரச்னைகள் பறந்துபோகும்.தொகுப்பு:; எஸ்.மேரி ரஞ்சிதம், சிவகங்கை.

The post தேன், லவங்கப்பட்டையின் அற்புத மருத்துவ குணங்கள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED கோடைகால பாதுகாப்பு