×

தனி தொகுதிகள்ல சீட்டு வாங்க தவம் கிடக்குறாங்க: இலையோடு கூட்டணி கட்சிக்காரங்க மல்லுக்கட்டு

வேலூர் மாவட்டத்துல இருக்குற குடியாத்தம், கே.வி.குப்பம் தொகுதி தனி தொகுதியா இருக்குது. ஏற்கனவே குடியாத்தம் தனி தொகுதியில இலைகட்சி சார்பில போட்டியிட்டு ஜெயந்தி பத்மநாபன் ஜெயிச்சாங்க. கட்சி மாறியதால தகுதி நீக்கம் செய்யப்பட்டாங்க. இருந்தாலும், இலைக்கட்சி சார்பில போட்டியிட்டு தானே ஜெயிச்சாங்க. அப்படின்ற எண்ணுத்துல, இலை கட்சி சார்பில இந்த முறை மாவட்ட வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த கோவிந்தசாமியும், கஸ்பா மூர்த்தி, பேரணாம்பட்டு ஒன்றிய இணை செயலாளர் பரிதா ஆகியோரும் இலை கட்சியில சீட்டுக்கு போட்டி போடுறாங்க. புரட்சிப் பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியும் குடியாத்தம் தொகுதியில சீட்டு வாங்க சில வாரங்களுக்கு முன்னாடியே குடியாத்தத்துல பெரிய அளவில மாநாட்டையே நடத்தி பிள்ளையார் சுழி போட்டாரு. மேலும் குடியாத்தம் தொகுதியை மையப்படுத்தி பாஜ மாநிலத் தலைவர் எல்.முருகன் வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி கே.வி.குப்பம் தொகுதியில போட்டியிடலாம்னு தகவல் பரவுச்சி. இதனால பாஜவினர், சுவர் விளம்பரங்களை எழுதவே தொடங்கிட்டாங்களாம். அதோடு இலைகட்சியில ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சுபாஷூம் நான் கட்சியில சீனியர் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கன்னு அவரும் சென்னையிலயே தங்கியிருக்காராம். அதோட, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன், இந்திய குடியரசுக் கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் மற்றும் லெட்டர் பேடு கட்சித் தலைவர்களும் குடியாத்தம், கே.வி.குப்பம் தொகுதியில ஏதாவது ஒரு தொகுதியை பெற்றே தீர வேண்டும்னு, தவம் கிடக்குறாங்களாம். இப்படி இரு தனி தொகுதிகளுக்கும் இலை கட்சியோடு கூட்டணிக் கட்சிக்காரங்க மல்லுக்குட்டுறாங்க. கூட்டணி கட்சியோட அழுத்தம் ஓவரா இருக்குறதால, எங்கடா நமக்கு சீட்டு கிடைக்காதோன்னு, இலை கட்சி நிர்வாகிங்க கொதிச்சு போயிருக்காங்களாம். சீட்டு கிடைக்கலைன்னா? இந்த கொதிப்பு எலக்‌ஷன்ல கண்டிப்பா வெளிய வரும்னு இலைகட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க….

The post தனி தொகுதிகள்ல சீட்டு வாங்க தவம் கிடக்குறாங்க: இலையோடு கூட்டணி கட்சிக்காரங்க மல்லுக்கட்டு appeared first on Dinakaran.

Tags : Gudiatham ,Vellore district ,KV Kuppam ,Kudiatham ,Dinakaran ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...