×

கொஞ்சம் உப்பு… கொஞ்சம் சர்க்கரை!

நன்றி குங்குமம் டாக்டர் ORS தினம் ஜூலை 29நமது நாட்டில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 10 சதவீதத்தினர் வயிற்றுப்போக்கால் உயிரிழப்பதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.கை கழுவாமல் சாப்பிடுதல், நோய்களைப் பரப்பும் ஈ, கொசுக்கள் ஆகியவை மொய்த்த சுகாதாரமற்ற தின்பண்டங்களை உண்ணுதல், அசுத்தமான நீரைக் குடித்தல் போன்றவை உயிரிழப்புக்கு வழி வகுக்கும் வயிற்றுப்போக்கிற்குக் காரணமாக அமைகின்றன.இந்தப் பாதிப்பில் இருந்து மீள Oral Rehydration Solution (ORS) எனச் சுருக்கமாக குறிப்பிடப்படுகிற உப்பு நீர் மற்றும் சர்க்கரை கரைசல் அத்தியாவசிய தேவையாகிறது. இதுபற்றி எல்லோரும் அறிந்துகொள்வது அவசியம்…* சாப்பிடுபவர்களுக்கு எந்தவிதமான கெடுதலையும் உண்டாக்காதது ORS. இது மருந்துக்கடைகளிலும், மருத்துவமனைகளிலும் கிடைக்கும். சுகாதாரமான முறையில் இந்த உப்பு மற்றும் சர்க்கரை கரைசலை நாமே தயாரிக்கலாம். ORS தயாரிக்க 1 லிட்டர் சுத்தமான தண்ணீர், சர்க்கரை 6 தேக்கரண்டி (ஒரு தேக்கரண்டி- ஐந்து கிராம்), உப்பு அரை தேக்கரண்டி இந்த மூன்றையும் நன்றாக சுத்தம் செய்யப்பட்ட பாத்திரத்தில் ஒன்றாகப் போட்டு கலந்தால் ORS கரைசல் தயார். ;* ORS என சுருக்கமாக குறிக்கப்படும் Oral Rehydration Solution கரைசலில் சோடியம் குளோரைடு – 2.6 கிராமும், பொட்டாசியம் குளோரைடு – 1.5 கிராமும், ட்ரைசோடியம் – 2.9 கிராமும் உள்ளதாக மருத்துவப் பரிசோதனை வல்லுனர்கள் கூறுகின்றனர். ;* குழந்தைகளைப் போன்றே முதுமைப் பருவத்தினருக்கும் ORS கரைசல் அவசியம். வயிற்றுப்போக்கு காரணமாக, நீர்சத்து வெளியேறி துன்பப்படும் சிறுவர், சிறுமியருக்கு உடனடியாக சிகிச்சை தரப்படுவது முக்கியமாகும். ஏனெனில், இவர்கள் நீர்ச்சத்தைச் சீக்கிரமாகவே இழந்துவிடுவார்கள்.* குழந்தைகளுக்கு அவர்களுடைய உடல் எடை அடிப்படையில் இக்கரைசலைக் கொடுப்பது நல்லதென குழந்தை நல மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். உதாரணத்துக்கு 10 கிலோ உடல் எடை கொண்ட ஒரு குழந்தைக்கு 100 மில்லி கிராம் தரலாம். ஒருவேளை அதில் குணமாகவில்லை என்றால் குழந்தைகள் நல மருத்துவர் ஆலோசனைப்படி இரண்டாம் கட்ட சிகிச்சையாக ஆன்டி-பயாடிக் தரலாம்.;; ;;;; ;* உப்பு, சர்க்கரை கரைசல் மற்றும் துத்தநாக(Zinc) மாத்திரைகள் வயிற்றுப்போக்கைத் தடுக்க வல்லன. வயிற்றுப்போக்கால் அவதிப்படுபவர்கள் ORS கரைசலைப் பயன்படுத்தும்போது அளவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் மிதமிஞ்சிய சர்க்கரை, நீர்ச்சத்து வெளியேற்றத்தை அதிகரிக்கும். அதிக உப்பால் குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.* அசுத்தமான நீரில் உப்பு மற்றும் சர்க்கரை கரைசலைத் தயாரித்து உபயோகிப்பதால், அதனால் கிடைக்க வேண்டிய பலன்கள் எதுவும் நமக்குக் கிடைக்காது. இக்கரைசலைப் பாதிக்கப்பட்ட நபர்களுக்குத் தரும் முன் நன்றாக கொதிக்க வைத்து அல்லது பலமுறை வடிகட்டி தருவது எதிர்பார்த்த பலன்களை நமக்குக் கிடைக்க செய்யும்.* பொதுவாக மனித உடலில், 60 சதவீதமும், குழந்தைகள் உடலில் 70 சதவீதமும் தண்ணீர் காணப்படுகின்றது. நீரிழப்பைத் தொடக்க நிலையிலேயே, கண்டறிந்து ORS கரைசலை எடுத்து கொண்டால், இதனைக் கட்டுப்படுத்த முடியும்.* மருத்துவத்துறை வளர்ச்சி பெறத் தொடங்கிய காலக்கட்டத்தில், வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த, குளுக்கோஸ் தண்ணீர் கொடுக்கப்பட்டது; நாளடைவில் இதனுடன் சிறிதளவு உப்பும் சேர்க்கப்பட்டது. பின்னர் இந்த துறையில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக முழு அரிசி, கோதுமை மற்றும் சோளம் ஆகியவை சேர்க்கப்பட்டு, ஏராளமான ORS கரைசல்கள் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கின.* வயிற்றுப்போக்கால் அவதிப்படுகிற குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதை எந்தக் காரணத்துக்காகவும் நிறுத்தக் கூடாது. ஏனென்றால், தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் காணப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதோடு, எளிதில் செரிக்ககூடிய ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம் போன்றவற்றையும் அவர்களூக்குத் தரலாம்.* நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கிற நார்ச்சத்து மலம் கழிப்பதைத் துரிதப்படுத்தும். எனவே, வயிற்றுப்போக்கால் அவதிப்படும் காலக்கட்டங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிடாமல் இருப்பது பாதுகாப்பானது. மாதுளை, ஆப்பிள் முதலான பழவகைகளைச் சாப்பிடுவது எதிர்பார்த்த பலன் தரும்.;;;;; ;– விஜயகுமார்

The post கொஞ்சம் உப்பு… கொஞ்சம் சர்க்கரை! appeared first on Dinakaran.

Tags : Saffron Doctor ,ORS Day ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...