×

நாட்டு சர்க்கரை இருக்கு… வெள்ளை சர்க்கரை எதுக்கு?!

நன்றி குங்குமம் டாக்டர் மாத்தி யோசி‘‘வெள்ளை சர்க்கரை ஆரோக்கியக் கேடு என்பதுபற்றி ஓரளவு விழிப்புணர்வு இருக்கிறது. ஆனாலும், அலட்சியம் காரணமாகவோ அல்லது வேறு; வழியில்லாமலோ அதனைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ‘காஃபி, டீக்கு அடிமையாகிவிட்டோமே…. இனிப்புப் பலகாரங்களைத்தானே; குழந்தைகள் விரும்புகின்றன’ என்று சந்தேகம் எழுப்புகிறவர்கள் வெள்ளை சர்க்கரைக்கு மாற்று என்னென்னவென்று யோசிக்க வேண்டும். அதுதான் சுவையோடு; ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் தரும். அந்த வகையில் நாட்டு சர்க்கரையை நல்ல சர்க்கரை என்றே சொல்லலாம். நாட்டு சர்க்கரை நல்ல, ஆரோக்கியமான; மாற்றாகவும் இருக்கும்’’ என்கிறார் உணவியல் நிபுணரான புவனேஸ்வரி சங்கர்.‘‘கரும்புச்சாறு பல்வேறு அவதாரங்களை எடுக்கிறது. நன்கு காய்ச்சி, உருக்கி, வடிகட்டி, உருண்டையாக்கினால் அது உருண்டை ெவள்ளம். அச்சாக்கினால் அச்சு; வெல்லம். பொடியாக்கினால் சர்க்கரை. இதைத்தான், நாட்டுச் சர்க்கரை என்கிறோம். இந்த சர்க்கரையில் ரசாயனம் கலந்தால்தான் அதனை வெள்ளை; சர்க்கரை(White sugar) என்கிறோம். வெள்ளை சர்க்கரை பார்க்க கவர்ச்சியாக இருப்பதைத் தவிர அதில் எந்தவித நன்மையும் இல்லை. கடந்த 2; ஆண்டுகளில் மட்டும் வெள்ளை சர்க்கரை பயன்பாட்டால் உடல் பருமன் மற்றும் அதிக எடை கொண்டவர்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளனர் என ஒரு; புள்ளி விவரம் கூறுகிறது.இந்தியர்களில் நான்கில் ஒருவர் Non communicable disease என்கிற தொற்றா நோயால் அவதிக்குள்ளாவதற்கும் வெள்ளை சர்க்கரை காரணமாக; இருக்கிறது. அதில் குறிப்பாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் அல்லது புற்றுநோய் என கண்டறியப்பட்டுள்ளது. 18 வயது, அதற்கு மேற்பட்ட; வயதுடையவர்களில் 10-ல் ஒருவர் சர்க்கரை நோயை எதிர்கொள்ள வேண்டி உள்ளது எனவும் தரவுகள் கூறுகின்றன. சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல் பருமன்; உள்ளவர்கள் வெள்ளை சர்க்கரை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதிக சர்க்கரையைப் பயன்படுத்துபவர்களுக்கும் விரைவில் உடல் பருமன் ஏற்படும்.; வெள்ளை சர்க்கரை பயன்படுத்துவோருக்கு உடல் மற்றும் வயிறு உபாதைகள் ஏற்படவும் வழிவகுக்கிறது.மத்திய அரசு, உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம்(Food safety and standards authority of india) என்ற அமைப்பு Eat right; India movement என்ற வலைத்தளத்தை உருவாக்கி உள்ளது. உப்பு, சர்க்கரை, கொழுப்பு சத்துகள் அதிகம் உள்ள பொருட்களை குறைவாக பயன்படுத்த; வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த வலைத்தளம் வழிகாட்டியாக இருக்க உருவாக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட உப்பு, சர்க்கரை, கொழுப்பு; அதிகமாக நாம் எடுத்துக்கொள்ளும்போது சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் வரும் என எச்சரிக்கையும் விடுக்கிறது. நிலைமை இப்படி இருக்க; வெள்ளை சர்க்கரையின் தீவிரத்தன்மை எல்லோருக்கும் எளிதில் புரியும்.ஆனால், நாட்டு சர்க்கரையில் எந்த ரசாயனமும் கலக்கப்படாததால் உடலுக்கும் கெடுதி இல்லை. அடிப்படையில் நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பழங்களில்; சர்க்கரை இருப்பதால் யாரும் நேரடியாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்பதுதான் என் கருத்து. ஆனால், நாம் சர்க்கரையை அதிகம் பயன்படுத்திப்; பழகிவிட்டோம். அதனால், வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரையை பயன்படுத்தினால் உடல்நலத்தை காக்கலாம். எந்த ஒரு இனிப்பு உணவிலும்; வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரையை சேர்த்துக் கொள்ளும் வழக்கத்தை உருவாக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் நாம் புசிக்கும் உணவாக; இருந்தாலும், பழங்களாக இருந்தாலும் அதில் இருக்கும் கார்போஹைட்ரேட் குளுக்கோஸாக மாறி நம் ரத்தத்தில் சேர்கிறது.அதுவே சர்க்கரையாக நேரடியாக நம் உணவில் எடுத்துக்கொள்ளும்போது, அந்த குளுக்கோஸ் நம் ரத்தத்தில் வேகமாகக் கலக்கிறது. எனவே, நாட்டு சர்க்கரையாக; இருந்தாலும் அதிக சர்க்கரையை சேர்த்துக் கொள்ளக் கூடாது. American heart association தனது குறிப்பேட்டில் பெண்கள் ஒரு நாளைக்கு 6; டீஸ்பூன் நாட்டு சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம் என்றும், ஆண்கள் 9 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளலாம் என்கிறது அதற்கு மேல் எடுத்துக்ெகாள்ள வேண்டாம்; எனவும் அறிவுறுத்தியிருக்கிறது. இதையும் மனதில் கொள்ள வேண்டும்!’’– அ.வின்சென்ட்

The post நாட்டு சர்க்கரை இருக்கு… வெள்ளை சர்க்கரை எதுக்கு?! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dr ,Mathi Yosi'' ,
× RELATED போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!