×

ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல தயார்: அமைச்சர் அதிரடி பதில்

குடகு மாவட்டதில் புலியின் தாக்குதலில் 6 பேர் இறந்துள்ளனர். 25க்கும் மேற்பட்ட மாடுகள் கொல்லப்பட்டுள்ளன. ஆட்கொல்லி புலியை பிடிப்பதற்கு வனத்துறை அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. புலியின் நடமாட்டம் காரணமாக தோட்டத்திற்கு தொழிலாளர்கள் செல்வதற்கே அஞ்சுகிறார்கள் என பேரவையில் மாஜி அமைச்சர் போபையா கூறினார். அப்போது பாஜ உறுப்பினர் அப்பச்சு ரஞ்சன், மக்களை அச்சுறுத்தும் புலியை பிடிக்க முடியவில்லை என்றால் அதை சுட்டுக்கொல்ல வேண்டும். இல்லை எனில் நாங்களே வேட்டையாடுவதற்கு தயாராக இருக்கிறோம் என்றார். இதைத்தொடர்ந்து போபையா, புலியுடன் திருமணம் செய்யவும் தயாராக இருக்கிறோம் என்றார். புலியுடன் திருமணம் என்பது வாழ்வா சாவா போராட்டமாகும் என்பதை குறிக்கும் குடகு பகுதியில் பேசப்படும் வட்டார மொழி ஆகும். இதைத்தொடர்ந்து அமைச்சர் அரவிந்த் லிம்பாவளி, கடந்த வாரம் ஒரு புலி கூண்டில் சிக்கியுள்ளது. அது பெண் புலி ஆகும். மற்றொரு ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்கவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் அரவிந்த் லிம்பாவளி கூறினார்….

The post ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல தயார்: அமைச்சர் அதிரடி பதில் appeared first on Dinakaran.

Tags : Kodagu district ,department ,Dinakaran ,
× RELATED பழைய பஸ் பாஸிலேயே மாணவர்கள் பயணிக்கலாம்: போக்குவரத்து துறை தகவல்