×

இந்தியா-வங்கதேசம் இடையிலான மைத்ரி சேது பாலத்தை திறந்து வைத்தார் மோடி: 133 கோடியில் கட்டப்பட்டது

புதுடெல்லி: இந்தியா-வங்கதேசம் இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில்  133 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட `மைத்ரி சேது’ பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். திரிபுரா மாநிலத்தின் சாப்ரூம், வங்கதேசத்தின் ராம்கர்க் பகுதிகளை இணைக்கும் மைத்ரி சேது’ பாலம், பெனி ஆற்றின் குறுக்கே 133 கோடி மதிப்பீட்டில், 1.9 கி.மீ. தூரத்துக்கு கட்டப்பட்டுள்ளது. இதனை நேற்று காணொலி மூலம் திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: இரட்டை இன்ஜின் பொருத்திய அரசின் மூலம், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு, வேகமான மாற்றத்தை திரிபுரா அடைந்து வருவதை மக்கள் உணர்ந்துள்ளனர். எங்கெல்லாம் இரட்டை இன்ஜின் பொருத்திய அரசு அமைய பெற்றுள்ளதோ, அங்கெல்லாம் ஏழைகள், விவசாயிகள், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மைத்ரி சேது திட்டம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்கது. இதன் மூலம், திரிபுராவின் சாப்ரூம் வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்துக்கு இடையிலான தூரம் வெறும் 80 கி.மீ. ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த பல ஆண்டுகளாக, கலாசாரத்தினால் பின்தங்கி உள்ள திரிபுராவில், வர்த்தகம் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.பிராந்திய வர்த்தகம் மேம்படும்திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, “தெற்கு ஆசியா இணைப்பில், ஒரு புதிய சகாப்தம் தொடங்கப்பட்டுள்ளது. அரசியல் எல்லைகள், வேறுபாடுகள் இதற்கு முட்டுக்கட்டையாக இருந்து விடக்கூடாது. இதன் மூலம், பிராந்திய அளவிலான வர்த்தகம் விரிவுபடுத்தப்படும். இதனால், இந்த பிராந்தியத்தின் பொருளாதார நடவடிக்கைகள் மேம்படுவதுடன், வங்கதேசத்தின் வர்த்தகம் இந்தியா உடன் மட்டுமின்றி, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுடனும் விரிவுபடுத்தப்படும்,’’ என்று தெரிவித்தார்….

The post இந்தியா-வங்கதேசம் இடையிலான மைத்ரி சேது பாலத்தை திறந்து வைத்தார் மோடி: 133 கோடியில் கட்டப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Modi ,Maitri Sethu Bridge ,India ,Bangladesh ,New Delhi ,Maitri Setu ,Maitri Setu bridge ,Dinakaran ,
× RELATED நாளை நடைபெறும் மோடி பதவியேற்பு விழாவை...