×

குடோனில் பதுக்கிய ரூ.50 லட்சம் பட்டாசுகள்; போலீசார் பறிமுதல்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தெற்கு அக்ரஹாரம், வடக்கு அக்ரஹாரம், கீழ அக்ரஹாரம், சுப்பநாயக்கன் தெரு, ஒன்வே சாலை, கடைத்தெரு, மாரியம்மன் கோவில் பகுதி, கீழத்தெரு, வளையமாபுரம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட வாணவெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை, வாணவெடிகள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளது. இந்நிலையில் இங்குள்ள குடோன்களில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அரசு அனுமதித்த அளவைவிட கூடுதலாக வைத்திருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்ததுடன் வியாபாரிகள் 9 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post குடோனில் பதுக்கிய ரூ.50 லட்சம் பட்டாசுகள்; போலீசார் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Tiruvarur District Valangaiman South Agraharam ,North Agraharam ,Lower Agraharam ,Subpanayakan Street ,One Way Road ,Shop Street ,Dinakaran ,
× RELATED ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்குள்...