×

மகளின் திருமண ஏற்பாட்டில் கொரோனா விதிமீறும் ஒன்றிய அமைச்சர்: 8,000 பேர் அமர தயாராகும் படுபிரமாண்டமான பந்தல்

ஹூப்பள்ளி: ஒன்றிய  அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் மகள் திருமணத்திற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அமரும் வகையில்  பந்தல் அமைத்து வருவது ஹூப்பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு  பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஹூப்பள்ளியில் மட்டும் கொரோனா  விதிமுறை மக்களுக்கு ஒன்று, மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒன்று என்றாக உள்ளது. ஒன்றிய அமைச்சர் பிரகலாத்ஜோஷியின் மகளுக்கு வரும் செப். 2ம் தேதி திருமணம்  நடக்க உள்ளது. இதற்காக ஹூப்பள்ளியில் உள்ள தனியார் ஓட்டலில் மேடை தயாராகி  வருகிறது. திருமணத்திற்கு ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, மாநில முதல்வர் பசவராஜ்  பொம்மை உட்பட பல தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக  திருமணத்தில் கலந்து கொள்ள 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள  நிலையில், ஒன்றிய அமைச்சரின் மகள் திருமணத்திற்கு 8 ஆயிரம் பேர் அமரும்  வகையில் இருக்கைகள், உணவு ஏற்பாடு மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள்  முழுவீச்சில் நடந்து வருகிறது.  இதன் மூலம் கொரோனா பரவினால் யார் பொறுப்பு?  என்ன செய்து கொண்டிருக்கிறது தார்வார் மாவட்ட நிர்வாகம்? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வரும் செப்டம்பர் 3ம் தேதி அப்பகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது….

The post மகளின் திருமண ஏற்பாட்டில் கொரோனா விதிமீறும் ஒன்றிய அமைச்சர்: 8,000 பேர் அமர தயாராகும் படுபிரமாண்டமான பந்தல் appeared first on Dinakaran.

Tags : Union minister ,Hupally ,Pragalath Joshi ,
× RELATED பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு லாலு...