×

பெரியாரின் 95 அடி உயர சிலை வைக்க அனுமதி: முதல்வருக்கு கி.வீரமணி நன்றி

சென்னை: திருச்சி மாவட்டம் சிறுகனூரில் தந்தை பெரியாரின் 95 அடி உயர் சிலை வைக்க அனுமதி அளித்து ஆணை பிறப்பித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று சந்தித்தார். அப்போது, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் சிறுகனூர் கிராமத்தில் பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் சார்பில் ‘பெரியார் உலகம்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் 95 அடி உயர சிலை, 40 அடி பீடம்,  வளாகத்தில் குழந்தைகள் பூங்கா, நூலகம் ஆகியவை அமைக்க அனுமதி வழங்கி ஆணைப்பிறப்பித்ததற்கு பொன்னாடை போர்த்தி, புத்தகம் வழங்கி நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, திராவிடர் கழக பொதுச்செயலாளர் அன்புராஜ், துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் ஆகியோர் உடன் இருந்தனர். …

The post பெரியாரின் 95 அடி உயர சிலை வைக்க அனுமதி: முதல்வருக்கு கி.வீரமணி நன்றி appeared first on Dinakaran.

Tags : Periyar ,K. Veeramani ,Chief Minister ,Chennai ,Sirukanur, Trichy district ,
× RELATED இந்து மத சடங்குகளின்றி நடைபெறும்...