×

காபூலை விட்டு நீங்கிய வெளிநாட்டு படைகள்!: இரவோடு இரவாக காபூல் விமான நிலையத்தை கைப்பற்றிய தாலிபான் தீவிரவாதிகள்..!!

காபூல்: ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறிவிட்ட நிலையில் அதனை இரவோடு இரவாக தாலிபான்கள் தன்வசப்படுத்தி இருக்கின்றனர். காபூல் விமான நிலையத்தில் இருந்து திங்கள் மாலை அமெரிக்காவின் கடைசி ராணுவ விமானம் புறப்பட்டு சென்றது. இதற்கு முன்பாகவே பிரிட்டன், ஜெர்மனி, துருக்கி உள்ளிட்ட நேட்டோ படைகளும் ஆப்கான் காலி செய்துவிட்டன. இதனால் கடந்த 16 நாட்களாக பரபரப்பாக இயங்கி வந்த காபூல் ஹமீது கர்ஸாய் சர்வதேச விமான நிலையம், அளவரமின்றி காணப்படுகிறது. இதையடுத்து இரவோடு இரவாக தாலிபான் படைகள் காபூல் விமான நிலையத்தை கைப்பற்றியுள்ளனர். காபூல் விமான நிலையத்தில் படைகளை குவித்துள்ள தாலிபான், ஆப்கான் மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். முடங்கியுள்ள பொது விமான போக்குவரத்தை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தாலிபான்கள் கூறியிருக்கின்றனர். அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் முற்றிலும் விளக்கப்பட்டிருந்தாலும், நேற்று கடைசி நேரத்தில் சில வெளிநாட்டவர்களால் காபூல் விமான நிலையத்தை வந்தடைய முடியவில்லை. இதையடுத்து அடுத்த சில நாட்களில் அவர்களை பத்திரமாக மீட்பது குறித்து தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிகிறது. ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்புவோருக்காக காபூல் விமான நிலையத்தை மீண்டும் திறக்க தாலிபான்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். …

The post காபூலை விட்டு நீங்கிய வெளிநாட்டு படைகள்!: இரவோடு இரவாக காபூல் விமான நிலையத்தை கைப்பற்றிய தாலிபான் தீவிரவாதிகள்..!! appeared first on Dinakaran.

Tags : Kabul ,Kabul airport ,United States ,NATO ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!