×

அதிமுக ஆட்சியில் ரூ.710 கோடியில் புனரமைக்கப்பட்ட கீழ்பவானி திட்டத்தில் முறைகேடு

ஈரோடு: அதிமுக ஆட்சியில் ரூ.710 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட கீழ்பவானி வாய்க்கால் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டும், விவசாயிகள் கட்டுமானத்தின் தரத்தை நிபுணர்கள் மூலம் பரிசோதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை மலைபாளையம் அருகே 10 நாட்களுக்கு முன் கீழ்பவானி பிரதான கால்வாயில் ஏற்பட்ட உடைப்பினால் வருவங்காடு, கடைக்காடு உள்ளிட்ட 4 கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து ஏராளமான விளைநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.710 கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற புனரமைப்பு பணிகளில் கட்டப்பட்ட தரமற்ற கட்டுமானமே கீழ்பவானி கால்வாய் உடைப்பிற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கீழ்பவானி பாசன பகுதி விவசாய சங்க பிரிதிநிதிகள் ஆலோசனை கூட்டம் சென்னிமலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்பவானி கால்வாயில் தரமற்ற கட்டுமானத்தை மேற்கொண்ட பிஎஸ்டி நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதுடன் கருப்பு பட்டியலில் நிறுவனத்தை சேர்க்க வேண்டும். முறைகேடான கட்டுமானத்திற்கு துணை போன உதவி பொறியாளர் முதல் தலைமை பொறியாளர் வரை அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.பவானி சாகர் அணை நிரம்பி உபரிநீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படும் நிலையில் கீழ்பவானி கால்வாய் உடைப்பால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாமல் விலை நிலங்களில் வறட்சி நிலவுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனிடையே உடைப்பு ஏற்பட்ட பகுதியில் கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வரைபடத்தை மாற்றி தற்போது புதிய வடிவமைப்பில் கால்வாய் உடைப்பை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….

The post அதிமுக ஆட்சியில் ரூ.710 கோடியில் புனரமைக்கப்பட்ட கீழ்பவானி திட்டத்தில் முறைகேடு appeared first on Dinakaran.

Tags : Kilpawani ,AIADMK ,Kilibawani ,
× RELATED தமிழக அரசு உடனடியாக பழைய பேருந்துகளை...