×

திருப்பூரில் வங்கதேச வாலிபர்கள் 3 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியில் உரிய ஆவணங்களின்றி வங்கதேசத்தை சேர்ந்த வாலிபர்கள் தங்கியிருப்பதாக நேற்று வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சென்று சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், வங்கதேசத்தை சேர்ந்த அல் அமின் (28), ரோகிம் மியா (22), ரியாது மோனி (21) என்பதும், இவர்கள் மேற்கு வங்கம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தது தெரியவந்தது. எவ்வித ஆவணமும் இல்லாததால் 3 பேரையும் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்….

The post திருப்பூரில் வங்கதேச வாலிபர்கள் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,North Police ,Kumaranandapuram ,Dinakaran ,
× RELATED ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நியாயமான கூலி உயர்வை பெற்றுத்தர வேண்டும்