×

வேதாரண்யம் அடுத்த தகட்டூரில் பாசன வாய்க்கால் கரையில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா தகட்டூர் பகுதியில் உள்ள பாசன வாய்க்காலின் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். வேதாரண்யம் தாலுகா தகட்டூர் பகுதியில் உள்ள இறைவை பாசனை பம்புசெட்டில் இருந்து ஆதியங்காடு, மலையன்காடு, ஆண்டியப்பன் காடு, ராமகோவிந்தன்காடு, சுப்பிரமணியன்காடு வழியாக பண்டாரதேவன்காடு வரை 5 கிலோ மீட்டர் உள்ள பாசன வாய்க்காலில் சுமார் 250 ஏக்கர் சாகுபடி நிலம் உள்ளது. இந்த வாய்க்காலில் வரும் தண்ணீரை வைத்துதான் இறைவை பாசனம் மூலம் தண்ணீர் இறைத்து சாகுபடி நடைபெற்று வருகிறது.இந்த வாய்க்காலில் கடந்த சில வருடங்களாக ராமகோவிந்தன் காடுப்பகுதியில் வாய்க்கால் கரைகளில் தனியார் சிலர் வேலிகளை வைத்து அரசு இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் நடந்து செல்வதற்கு பாதை இல்லை. மேலும் வாய்க்கால்களில் தொடர்ந்து குழாய்கள் வைத்து தடுப்பு ஏற்படுத்தி அதனால் தண்ணீர் தேங்கி வருவதால் சரியான அளவு தண்ணீர் வராமல் சாகுபடிக்கு சிரமமாக உள்ளது. எந்தவித அனுமதியும் பெறாமல் அடுத்தடுத்து தடுப்புகளை அமைத்துள்ளனர். இதனை உடனே பொதுப்பணித்துறை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தூர்ந்து போய் உள்ள பாசன வாய்க்காலை தூர்வாரி தருமாறு அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்….

The post வேதாரண்யம் அடுத்த தகட்டூரில் பாசன வாய்க்கால் கரையில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Thakattur ,Vedaranyam ,Dinakaran ,
× RELATED நாகை அருகே தண்டவாளத்தில் படுத்து...