×

கீழடி ஏழாம் கட்ட அகழாய்வு நீட்டிப்பு: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் அகழாய்வுக்குப் பிறகு மிகப்பெரிய அளவிலான அகழாய்வு சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வுகளின் ஏழாம் கட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி தொடங்கியது. கொரோனா 2வது அலை காரணமாக அகழாய்வு பணிகள் சற்று பாதிக்கப்பட்டாலும், தமிழர் நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதை நிரூபிக்கும் வகையில் ஏராளமான பொருட்கள் அங்கு கிடைத்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் 60 செ.மீ உயரம், 34 செ.மீ விட்டம், 24. செ.மீ. விட்டமுள்ள வாய்ப்பகுதி கொண்ட சிவப்பு வண்ண பானை கிடைத்திருக்கிறது. இது தொல்லியல் ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்திருக்கிறது. இந்த பானை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மேலும் 5 பானைகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் இன்னும் கூடுதலாக அகழாய்வு நடத்தினால் இன்னும் பல வியப்புகள் வெளிப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், செப்டம்பர் மாதத்தின் முற்பகுதியில் ஆய்வுகளை முடிக்க அதிகாரிகள் தீர்மானித்திருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழர் நாகரிகத்தின் தொன்மைக்கு கட்டியங்கூறும் ஏராளமான பொருட்கள் இந்த அகழாய்வில் கிடைக்கலாம் என்று கூறப்படும் நிலையில் ஏழாம் கட்ட ஆய்வை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து விடக் கூடாது. எனவே, ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகளை நீட்டித்து தமிழக அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post கீழடி ஏழாம் கட்ட அகழாய்வு நீட்டிப்பு: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Lower Seventh ,Ramadoss ,CHENNAI ,BAMA ,Tamil Nadu ,Adichanallur ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலை வெப்பம்...