×

குமரியில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்: கோயில்களில் பக்தர்கள் வழிபாடு

நாகர்கோவில்: ஆவணி மாதம் ரோகினி நட்சத்திரம், அஷ்டமி திதியில் தான் கிருஷ்ணர் அவதரித்தார்.  அதன்படி இன்று ரோகினி நட்சத்திரத்தையொட்டி, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களிலும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நடைபெற்றது. கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட வில்லை. இன்று காலை கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கிருஷ்ணஜெயந்தியை கோயில்களில் எளிமையான முறையில் பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் கிருஷ்ணசுவாமி கோயில் அமைந்துள்ளது. குமரி குருவாயூர் என அழைக்கப்படும் இங்கு கிருஷ்ணன், குழந்தை கிருஷ்ணனாகவே இரு கைகளில் வெண்ணெய் ஏந்தி காட்சி தருகிறார். அதிகாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், தீபாராதனை, பூஜைகள் நேரங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை. அதன் பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். காலையிலேயே குழந்தைகளுடன் ஏராளமானவர்கள் வந்தனர். சில பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமணிந்து அழைத்து வந்திருந்தனர். திங்கள்நகர் ராதாகிருஷ்ணன் கோயில், சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயில்,  திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில், வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில், கிருஷ்ண பிறப்பையொட்டி  சிறப்பு பூஜைகள் நடந்தன. வீடுகளில் இன்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி,  மா கோலமிட்டு கிருஷ்ணரை வரவேற்று பூஜைகள் நடத்தினர்….

The post குமரியில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்: கோயில்களில் பக்தர்கள் வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Krishna Jayanti ,Kumari ,Nagercoil ,Lord ,Krishna ,Ashtami Tithi ,Rohini ,Avani ,
× RELATED கன்னிப்பூ சாகுபடி பணிக்கு கோடை மழையை எதிர்நோக்கும் விவசாயிகள்