×

விபத்துகளை தவிர்க்க நான்கு வழிச்சாலையில் தடுப்புவேலி

திருமங்கலம்: சமயநல்லூரிலிருந்து விருதுநகர் வரையில் நான்கு வழிச்சாலையில் விபத்துகளை தவிர்க்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பெங்களூர்-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை சமயநல்லூரிலிருந்து விருதுநகர் வரையில் மேடுபள்ளமாக காட்சியளித்தது. இதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை சார்பில் கடந்த மாதம் புதிய சாலை அமைக்கப்பட்டது. இந்த புதிய சாலைகள் சர்வீஸ் ரோட்டினை காட்டிலும் அதிக உயரத்தில் அமைக்கப்பட்டன. நடுவே இருக்கும் தடுப்புசுவர் புதியசாலையால் பள்ளமாக மாறியதால் அதிகளவில் விபத்துகள் உண்டாகும் நிலை ஏற்பட்டது.நான்கு வழிச்சாலையில் மின்னல் வேகத்தில் செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி சர்வீஸ் ரோட்டிற்குள் எளிதாக பாய்ந்து அதில் செல்வோரை விபத்தில் சிக்கும் வகையில் சாலை இருப்பதாக வாகனோட்டிகள் அச்சம் தெரிவித்தனர்.  இந்நிலையில் சர்வீஸ்ரோடு வரும் பகுதிகளில் நான்கு வழிச்சாலையில் மெயின் சாலையும், சர்வீஸ் ரோட்டினையும் பிரிக்கும் வகையில் தடுப்புவேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி தோப்பூரிலிருந்து திருமங்கலம் நகர் வரையிலும், சிவரக்கோட்டை, மேலக்கோட்டை சர்வீஸ்ரோடு மற்றும் கள்ளிக்குடி நகர் பகுதியிலுள்ள சர்வீஸ் ரோடு ஆகிய பகுதிகளில், நான்கு வழிச்சாலை மெயின் ரோட்டிற்கு இடையே இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.  இதன் மூலமாக விபத்துகள் பெரிய அளவில் குறையும் என்பதால் வாகனோட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்….

The post விபத்துகளை தவிர்க்க நான்கு வழிச்சாலையில் தடுப்புவேலி appeared first on Dinakaran.

Tags : Barricade ,-lane ,Thirumangalam ,Samayanallur ,Virudhunagar ,Bangalore- ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED தோவாளை அருகே நான்குவழிச்சாலையில்...