×

பெரம்பலூரில் காவலர்களுக்கு வருடாந்திர துப்பாக்கி சுடும் பயிற்சி

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு வருடாந்திர துப்பாக்கி சுடும் பயிற்சி ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் அருகே மலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் ஆண்டுதோறும் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படும். அதன்படி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி உத்தரவின்படி நடப்பாண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பணியாற்றும் காவல் நிலையம் மற்றும் ஆயுதப் படை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பணியாற்றும் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் அருகே மலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி உத்தரவின்படி ஏடிஎஸ்பி ஆரோக்கிய பிரகாசம், பாண்டியன், ஆயுதப்படை டிஎஸ்பி சுப்புராமன், இன்ஸ்பெக்டர் சுப்பையன் ஆகியோர் காவலர்களுக்கு அளிக்கப்படும் துப்பாக்கிசுடும் பயிற்சியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். துப்பாக்கி சுடும் பயிற்சியில் பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பணியாற்றும் சுமார் 600 காவலர்கள் கலந்து கொண்டு துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றனர்….

The post பெரம்பலூரில் காவலர்களுக்கு வருடாந்திர துப்பாக்கி சுடும் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Badalur ,Alathur taluk ,Naranamangalam ,Dinakaran ,
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்: கலெக்டர் அதிரடி உத்தரவு