×

மகா கும்பமேளாவுக்கு தயாராகிறது ஹரித்துவார்!: மகாசிவராத்திரியை முன்னிட்டு கங்கையில் புனித நீராட பக்தர்கள் திரள்வதால் விழாக்கோலம்..!!

டெஹ்ராடூன்: உத்தராகண்ட்டில் கும்பமேளாவின் சிறப்பு நிகழ்வான மகாசிவராத்திரியை ஒட்டி கங்கையில் புனித நீராட பக்தர்கள் குவிந்து வருகின்றனர். உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா வெகுவிமர்சியாக கொண்டாடப்படும். விழாவின் முக்கிய நிகழ்வான நாளை மகாசிவராத்திரி கொண்டாடப்படுவதை ஒட்டி கங்கையில் புனித நீராட பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். இதையொட்டி ஹரித்துவார் நகரம் தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற பக்தர்கள் அறிவுறுத்தப்படுவார்கள் என்றும் விழாவுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துவிட்டதாகவும் கும்பமேளா அதிகாரி தீபக் ராவத் தெரிவித்துள்ளார். மகாசிவராத்திரி விழாவுக்கு பிறகு வரும் ஏப்ரல் 12, 14 மற்றும் 27ம் தேதிகளிலும் கங்கை நதியில் புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த புனித நீராடலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கும்பமேளா ஹரித்துவாரில் முதலில் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து பிரயாக், நாசிக், உஜ்ஜயினி நகரில் நடைபெறுகிறது. கும்பமேளாவில் உடலெங்கும் திருநீறு பூசியபடி மலர்மாலை மட்டுமே சூடி நாக சாதுக்கள் எனப்படும் நிர்வாண சாமியார்கள் ஊர்வலமாக வருவார்கள். அவர்கள் அனைவரும் ஹர ஹர மகாதேவா என்று மந்திரம் ஜெபித்தவாறு கடுங்குளிரையும் பொருட்படுத்தாது புனித நீராடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது….

The post மகா கும்பமேளாவுக்கு தயாராகிறது ஹரித்துவார்!: மகாசிவராத்திரியை முன்னிட்டு கங்கையில் புனித நீராட பக்தர்கள் திரள்வதால் விழாக்கோலம்..!! appeared first on Dinakaran.

Tags : Kumbamela ,Ganga ,MahaSivaratri ,Uttarakhand ,
× RELATED கங்கை அம்மன் கோவில் திருவிழா; வேலூர்...