×

தடங்கம் வனப்பகுதியில் திடீர் தீ: மூலிகை செடிகள் எரிந்து நாசம்

நல்லம்பள்ளி: தடங்கம் ஊராட்சியில் மாவட்ட நீதிமன்றம் மற்றும் வனப்பகுதியில் தீப்பற்றி எரிந்தது. இதில் அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் எரிந்தன. நல்லம்பள்ளி அடுத்த தடங்கம் ஊராட்சியில் மாவட்ட நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இதன் அருகே 50 ஏக்கர் பரப்பில் வனப்பகுதி உள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் வனப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் தர்மபுரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சரியான பாதை வசதி இல்லாதததால், நடந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் வெயில் அதிகரிப்பால் மலைப்பகுதியில் பெரும்பாலான மரங்கள், செடி கொடிகள் காய்ந்த நிலையில் உள்ளதால், தீ மளமளவென பரவியது. இதனால் தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் தவித்தனர். ஆனாலும் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் 10 ஏக்கர் பரப்பில் வனப்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. இதில் அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்தன. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், வனப்பகுதிகளில் ஆடு மேய்க்க செல்பவர்கள், மது அருந்த செல்பவர்கள் தீ வைப்பதற்கும் வாய்ப்புள்ளது. இதனால் வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதிகளில் ரோந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. என்றார்….

The post தடங்கம் வனப்பகுதியில் திடீர் தீ: மூலிகை செடிகள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Thadangam forest ,Thadangam ,Datangam forest ,Dinakaran ,
× RELATED திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்