×

சீசன் முன்கூட்டியே துவங்கியது; கோடியக்கரை சரணாலயத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்து: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

வேதாரண்யம்: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வர துவங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம். தற்போது மழைக்கால துவக்கத்தை அறிவிக்கும் விதமாக  சரணாலயத்துக்கு ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து ஆலா பறவைகள் வந்துள்ளன. வெளிநாட்டு பறவைகள் வேதாரண்யம் பறவைகள் சரணாலயத்துக்கு வர துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து வனச்சரக அலுவலர் அயூப்கான் கூறுகையில், ரஷ்யா நாட்டிலிருந்து கூழைக்கிடா, இலங்கையில் இருந்து பூநாரை மற்றும் கரண்டி மூக்குநாரை, சைபீரியாவில் இருந்து உள்ளான் வகையை சேர்ந்த பட்டாணி உள்ளான், கொசு உள்ளான், அண்டார்டிகாவில் இருந்து கடல்காகம் என 18 வகையான ஆலா பறவைகள் தற்போது வந்துள்ளன. இப்பறவைகள் வந்து 3 முதல் 4 வாரத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கும். அதன்பிறகு இந்த சரணாலயத்துக்கு பல்வேறு நாடுகளிலிருந்து 247 வகையான பறவைகள் வந்து தங்கி செல்லும். இந்த பறவைகளை இரட்டைதீவு, கோவை தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் காணலாம். கடந்தாண்டு ஒன்றரை லட்சம் வெளிநாட்டு பறவைகள் வந்து சென்றன. இந்தாண்டு பருவநிலை நன்றாக உள்ளதால் 5 லட்சம் பறவைகள் வந்து தங்கி செல்லும் என்று எதிர்பார்க்கபடுகிறது என்றார்….

The post சீசன் முன்கூட்டியே துவங்கியது; கோடியக்கரை சரணாலயத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்து: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kodiyakar Sanctuary ,Vedaranagar ,Kodiyakar Bird Sanctuary ,Nagai District Vetaranthayam ,Kodiyakarah Sanctuary ,Dinakaran ,
× RELATED கோடியக்கரையில் சீசன் களைகட்டியது; 1...